டெல்லி தேர்தலில் வெல்லப்போவது யார்? ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்.. எக்சிட் போல்கள் சொல்வது என்ன?
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அங்கே 70 இடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் 36 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி - பாஜக -காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. அதேபோல் சிபிஎம், சிபிஐ கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்துள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்று வெளியான எக்சிட் போல் கணிப்புகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.

சாணக்கியா ஸ்ட்ராடஜி கணிப்பு:
டெல்லியில் கடும் போட்டிக்கு இடையே பாஜக ஆட்சியை பிடிக்கும், என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போலில் தகவல் வெளியாகி உள்ளது. 39-44 இடங்களில் பாஜக வெல்லும் என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 25-28 இடங்களில் வென்று கடும் போட்டியாக அமையும் என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மொத்தமாக 70 இடங்கள் உள்ளது. இதற்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. அங்கே ஆட்சியை பிடிக்க 36 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த நிலையில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட கூடுதலாக.. அதாவது 39-44 இடங்களில் பாஜக வெல்லும் என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீப்பிள் பல்ஸ் கணிப்பு:
டெல்லியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். 51-60 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. ஆம் ஆத்மி வெறும் 10-19 இடங்களில் வென்று தோல்வி அடையும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அங்கே ஒரு இடம் கூட வெல்ல வாய்ப்பில்லை என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிவி (DV) ஆராய்ச்சி நிறுவனம்:
டிவி (DV) ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பிலும் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக 36-44 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 26-34 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஆம் ஆத்மி கடுமையான போட்டியளித்தாலும் அவர்களை விட அதிகமாக வெற்றி பெற்று பாஜக தலைநகரை கைப்பற்றும் என்று கூறியுள்ளனர்.
பலோடி சத்தா பஜார்:
பலோடி சத்தா பஜார் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே 34-36 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 0-1 தொகுதியில் வெற்றி பெறுவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு தொங்கு சட்டசபை உருவாக அதிக வாய்ப்புள்ளது. அப்படி தொங்கு சட்டசபை உருவானால் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் அது முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது.
Mind Brink கருத்து கணிப்பு:
Mind Brink கருத்து கணிப்பின்படி மீண்டும் ஆம் ஆத்மி கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 44 முதல் 49 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜக 21 முதல் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 0 முதல் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weepreside கணிப்பு:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 46 - 52 இடங்களில் வெல்லக்கூடும் என்றும், பாஜக 18 - 23 இடங்களில் வெல்லும் என்றும் காங்கிரஸ் கட்சி 0 - 1 இடத்தில் வெல்லும் என்றும் Weepreside எக்ஸிட் போல் ரிசல்ட் தெரிவிக்கிறது. தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பின்படி வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி 49.2%, பாஜக 42.8%, காங்கிரஸ் கட்சி 5.1% பெற்றுள்ளதாக Weepreside தெரிவித்துள்ளது.
pollster கணிப்பு:
டெல்லியில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று pollster கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 36 முதல் 44 தொகுதிகளில் வெல்லும் எனவும், ஆம் ஆத்மி 26-34 இடங்களில் வெல்ல வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
POLL DIARY கணிப்பு:
டெல்லி சட்டசபை தேர்தலில் 42 முதல் 50 தொகுதிகள் வரை பாஜக கைப்பற்றும் என்று POLL DIARY கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி 18 முதல் 25 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் கட்சி 0 முதல் 2 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
People Insight கணிப்பு:
டெல்லியில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று People Insight கருத்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜக 44.7 சதவீத ஓட்டுகளுடன் 40 முதல் 44 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் கணிப்பு:
ஹிந்துஸ்தான் டைம்ஸ் கணிப்பின்படி, பாஜக: 51 -60 வென்று ஆட்சி பிடிக்கும். ஆத்மி: 10-19 காங்கிரஸ்: 00-00 என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது
CNN - நியூஸ் 18 எக்ஸிட் போல்:
அதன்படி, சி.என்.என் - நியூஸ் 18 (CNN News18) நடத்திய கருத்துக் கணிப்பின்படி, டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 30 இடங்களிலும் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்பில்லை என சி.என்.என் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிடிவி கணிப்பு:
என்டிடிவி கருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் பாஜக 51 முதல் 60 தொகுதிகளை வென்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 19 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேவிசி கருத்து கணிப்பு:
டெல்லியில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 39 முதல் 45 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்ற 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அதை விட கூடுதல் இடங்களில் பாஜக வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக அரியணை ஏறும். அதேபோல் இந்த கருத்து கணிப்பின்படி ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 முதல் 31 இடங்களில் மட்டுமே வெல்லும். காங்கிரஸ் கட்சி 0 முதல் 2 இடங்களிலும், மற்றவர்கள் 0 முதல் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜேவிசி கருத்து கணிப்பு பாஜகவினருக்கு உற்சாகத்தை தந்துள்ளதோடு, ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
டைம்ஸ் நவ் கணிப்பு:
டைம்ஸ் நவ் கணிப்பின்படி,
பாஜக: 37-43
ஆம் ஆத்மி: 27-34
காங்கிரஸ்: 00-02
இதரவை: 00-01 என கணிப்புகள் வெளியாகியுள்ளன. தொடக்கத்திலிருந்து பாஜக இந்த தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். இப்படி இருக்கையில் கணிப்புகளிலும் பாஜக பெரும்பான்மை இடத்தை பிடிப்பதாக வெளியாகியுள்ளது. இருப்பினும் தேர்தல் முடிவுகளில்தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications