தகவல் பாதுகாப்பு சட்டம்.. பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல்.. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
டெல்லி: மத்திய அரசின் தகவல் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்த பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை நேற்று பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
2019ல் இந்த சட்டம் இரண்டு அவைகளிலும் கொண்டு வரப்பட்ட நிலையில், அது பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற குழுவின் ஆய்விற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் இந்த அறிக்கையை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். பாஜக எம்பி பிபி சவுத்திரி இதை லோக்சபாவில் தாக்கல் செய்தார். 250 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஆகும் இது.

பரிந்துரை
மொத்தம் 6 முறை இந்த கமிட்டியின் ஆய்வு காலம் நீட்டிக்கப்பட்டது. பல கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தற்போது இந்த கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரளுமன்ற கூட்டுக்குழு இது தொடர்பாக அளித்துள்ள அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

பர்சனல் தகவல்
கூட்டுக்குழு பரிந்துரையின்படி தகவல் பாதுகாப்பு சட்டத்தில் தனிப்பட்ட தகவல்கள், பொது தகவல்களுக்கு இடையிலான வேறுபாடு சரியாக அளிக்கப்படவில்லை. தனிப்பட்ட பர்சனல் தகவல்களை இனம் காணும் வழிமுறைகள் இதில் இல்லை. இதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தனிப்பட்ட தகவல், பொதுத்தகவல் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை இந்த சட்டத்தில் காட்ட வேண்டும்.

24 மாதம்
இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர கால அவகாசம் எடுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் சட்டத்தை அமலாக்க வேண்டும் என்பதால் அதற்கு என்று தனி டைம் லைன் உருவாக்க வேண்டும். 24 மாதங்களில் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வரலாம் என்று இந்த பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியா
அதேபோல் இந்த சட்டத்தின்படி இந்தியாவில் பயனாளர்களை கொண்டு இருக்கும் சமுக வலைதள பக்கங்கள் அனைத்தும் இந்தியாவில் அலுவலகத்தை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் ஒரு ஆபிஸ் அமைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்பது தகவல் பாதுகாப்பிற்கு என்று கவுன்சில் அமைக்க வேண்டும். அது எந்த தகவலாக இருந்தாலும் இந்த கவுன்சிலுக்கு கீழ் வரும்.

பைனான்ஸ்
அதேபோல் சர்வதேச பரிவர்த்தனை மேற்கொள்ள உதவும் SWIFT போன்ற பரிவர்த்தனை அமைப்புகளுக்கு பதிலாக புதிய பரிவர்த்தனை அமைப்புகளை கொண்டு வர வேண்டும். சர்வதேச பண பரிவர்த்தனையின் போது டேட்டா திருடப்படாமல் இருக்கும் வகையில் புதிய பரிவர்த்தனை அமைப்புகளை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அரசு
அதேபோல் அரசு இந்த டேட்டாக்களை கண்காணிக்கிறது என்றால் சட்டப்படி மட்டுமே கண்காணிக்க வேண்டும். அதை மீறி கண்காணிக்க கூடாது. எந்த ஒரு டேட்டா இழப்பு அல்லது ஹேக்கிங் நடைபெற்றாலும் அதை அரசோ, தனியார் நிறுவனமோ யாராக இருந்தாலும் 72 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும் என்று இந்த குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

அபராதம்
அதேபோல் டேட்டா இழப்பு அல்லது கசிவு குறித்து தகவல் கொடுக்காத நிறுவனங்களுக்கு 5 கோடி அபராதம் அல்லது அந்த நிறுவனத்தின் மொத்த சர்வதேச வருவாயில் ஒரு ஆண்டின் 2 சதவிகித வருவாய் அபராதமாக விதிக்கப்படும். அதேபோல் டேட்டா பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றாத, டேட்டாவை முறையாக பராமரிக்காத, இதற்கு என்று தனி அதிகாரியை நியமிக்காத நிறுவனங்களுக்கும் இதே அளவு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று இந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications