நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு.. பாஜக அரசியல்வாதிகளுக்கு "கைலாசாவிலிருந்து கண்டனம்"
டெல்லி: இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை குரிய வகையில் பேசிய இந்திய அரசியல்வாதிகளுக்கு கைலாசா நாட்டிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, தொலைகாட்சி விவாத மேடையில் பேசிய போது முஸ்லீம்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை கூறியிருந்தார்.
மேலும் இவரது கருத்தை டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நவீன் ஜிந்தால் ஆதரித்து பேசியிருந்தார். இந்தியாவில் உள்ள முஸ்லீம் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

சஸ்பெண்ட்
இந்த நிலையில் நுபுர் சர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நவீன் ஜிந்தால் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்திய அரசுக்கு எதிராக அரபு நாடுகள் கொந்தளித்துள்ளன. இந்திய தூதருக்கு துபாய், சவுதி, பஹ்ரைன், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகள் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளன.

இந்திய பொருட்களை புறக்கணிப்போம்
மேலும் இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளன. இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகளும் பறிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கைலாசா நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் என சொல்லப்பட்டு ஒரு ட்விட்டர் கணக்கு உள்ளது.
இது உண்மையிலேயே கைலாசா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம்தானா என தெரியவில்லை. ஆயினும் அந்த ட்விட்டரில் போட்ட கருத்துகள் வைரலாகி வருகின்றன. அந்த ட்வீட்டில், நபிகள் நாயகம் குறித்து இந்திய அரசியல்வாதிகளால் மோசமான கருத்துகளை வெளியிட்டமைக்கு கைலாசா சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கைலாசாவுக்கான இந்திய தூதர்
கைலாசாவுக்கான இந்திய தூதருக்கு வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருந்தோம். அவரிடம் நபிகள் நாயகம் குறித்து இந்திய அரசியல்வாதிகள் பேசியதற்கு கடும் கண்டனங்களை இந்திய அதிகாரியிடம் தெரிவித்தோம். அதே போல் சர்ச்சையாக பேசிய ஆளும் கட்சியை சேர்ந்த இருவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்ததை கைலாசா வரவேற்கிறது.
Recommended Video

அமைதி
இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை கைவிட்டுவிட்டு இந்தியா ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அது போல் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிராக தூண்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அந்த ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது கைலாசாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கா என தெரியவில்லை. எனினும் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications