பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான நேரத்தில் நீதி வேண்டி பிரச்சாரம்
கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்க உறுதி செய்வதற்கு நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.
டெல்லி: கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்க உறுதி செய்வதற்கு நாடு தழுவிய பிரச்சாரத்தை மார்ச் 21ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பிரபல இயக்குநரும் நடிகருமான ஃபர்ஹான் அக்தர் இந்த இயக்கத்தின் தூதராக செயல்படுவார்.
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்கல் மனநல ஆதரவு மற்று மறுவாழ்வு ஆகியவற்றை உறுதி செய்யும் முயற்சியில் கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை கேஎஸ்சிஎஃப் மார்ச் 21ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குநருமான ஃபர்ஹான் அக்தர் இந்த பிரச்சாரத்தின் தூதராக ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் நீதி என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் 100 மிக முக்கியமான மாவட்டங்களில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளை பாதுகாத்தால் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் பாதிக்கப்படட 5000 பேருக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு மனநல உதவி மற்றும் சட்டப்பூர்வ ஆதரவை கேஎஸ்சிஎஃப் வழங்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் மறுவாழ்வு, ஆதரவு, கல்வி, மற்றும் திறன்மேம்பாட்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.
குழந்தைகள் நட்பு செயல்முறைகள் குறித்து நீதித்துறை மற்றும் நிர்வக அமைப்புகளில் குழந்தைகள் பாதுகாப்பில் பல்வேறு பங்குதாரர்களுக்கு பயிற்சி மற்றும் உணர்திறன் பட்டறைகளை கேஎஸ்சிஎஃப் ஏற்பாடு செய்யும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications