கனிமொழி நறுக்குன்னு கேள்வி.. "பெண் குழந்தைகளின் நிர்வாண காட்சி".. டக்கென பதில் சொன்ன மத்திய அமைச்சர்
கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார்
டெல்லி: மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய முக்கியமான கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில், பல இடங்களில் குழந்தை நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்படும் காட்சிகள் எதற்காக எடுக்கப்படுகின்றன? அதில், நாம் எதற்கு நடிக்க வேண்டும்? என்கிற புரிதல் கூட இல்லாமல் நடிக்கிறார்கள்.. மேலும், வரம்பு மீறிய காட்சிகளில் நடிப்பதற்காக அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பானது மிகவும் முக்கியமான ஒன்றாகி போனாலும், பல இடங்களில் பெண் குழந்தைகள் தங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே, அந்த விவரங்கள் புரியாமலேயே பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

விழிப்புணர்வு
எவ்வளவுதான் அரசு இந்த விஷயத்தில் விழிப்புணர்வாக இருந்தாலும், குழந்தைகள் பாதுகாப்பில் அரசு உறுதுணையாக இருந்தாலும், தொடர் குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. இந்த பிரச்சனையைதான் கனிமொழி இன்று கிளப்பி உள்ளார்.. திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி சில சந்தேகங்களை இன்று மக்களவையில் எழுப்பியிருந்தார்.

நிர்வாண காட்சிகள்
அப்போது அவர் பேசும்போது, "இணைய தொடர்கள், திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் பல பெண் குழந்தைகளும் நடிக்கிறார்கள்.. அவர்களில் பலர் எடுக்கப்படுகிற காட்சி பற்றிய புரிதல் இல்லாமலேயே நிர்வாணம் உள்ளிட்ட சில வரம்பு மீறிய காட்சிகளில் நடிக்க வைக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இந்த நிலையில் குழந்தைகளை நடிக்க வைக்கும் போது தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் தெளிவான வரையறையுடன் கூடிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்கிறதா?..

ஸ்மிருதி இரானி
ஏனென்றால், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.. இவர்களுக்கான பாதுகாப்பு குறித்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தெளிவான ஆலோசனை வழங்கி இருக்கிறதா?" என்று கேட்டிருந்தார். இதற்குதான் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார்..

நிர்வாண காட்சிகள்
"பெண் குழந்தைகளை நிர்வாணக் காட்சிகள் உள்ளிட்ட வரம்புமீறிய காட்சிகளில் நடிக்க வைத்தல் என்பது போக்சோ சட்டத்தின்படி குற்றம் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்து கொள்கிறேன்... மேலும், இதுபோன்ற காட்சிகளை பரப்புதலும் தடை செய்யப்பட்டது என்றும் போக்சோ சட்டத்தில் கொண்டு வரக் கூடியது என்றும் தெரிவித்து கொள்கிறேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து இவற்றைத் தடுக்க உறுதி பூண்டுள்ளது.

சீன்கள்
இதுபற்றி நாங்கள் ஊடக நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி கொண்டுதான் இருக்கிறோம்.. பெண் குழந்தைகளை வரம்பு மீறிய காட்சிகளுக்குள் ஈடுபடுத்தினால் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்கப்படாது. இவர்கள் மீது போக்சோ சட்டம் பயன்படுத்தப்படும் என்பதை அரசியல் வேறுபாடுகளின்றி இந்த அவையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்... பெண் குழந்தைகளை வரம்பு மீறி காட்சிப்படுத்தினால் போக்சோ பாயும் என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய்யை வீழ்த்த கனிமொழிக்கு பொறுப்பு! ஸ்டாலினின் அசைன்மென்ட்.. அதிரடி அரசியல் திட்டம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications