சிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட கேள்வியை சொல்லி கபில் சிபல் வாதம்.. நீதிமன்றத்தில் சிரிப்பலை..
Recommended Video
டெல்லி: சிபிஐ காவலில் சிதம்பரத்திடம் உங்களுக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதா என்றொல்லாம் கேட்டுள்ளார்கள் என வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
ப சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபரப்பாக நடந்தது.
அப்போது ப சிதம்பரம் சார்பில் ஆஜரான கபில் சிபல் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆகியோரிடையே பரபரப்பான விவாதம் நடந்தது.

நேற்று விவாதம் நடந்திருக்கு
கபில் சிபல் வாதிடுகையில், அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கொடுக்க வேண்டிய ஆவணங்களை ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளது. இதை வைத்து நேற்று தொலைகாட்சிகளில் விவாதம் நடந்தது.இன்று நாளிதழ்கள் செய்திகள் வந்துள்ளது என்றார்.

துஷார் மேத்தா மறுப்பு
அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா எந்த ஆவணங்களையும் நாங்கள் கசியவிடவில்லை என்றார்.

ஆதாரத்தை வெளியிட முடியுமா
தொடர்ந்து பேசிய கபில் சிபல் "வழக்கில் தொடர்புடையதாக ஒரு வங்கி கணக்கையோ, இந்த வழக்கில் பெற்ற ஆதாயத்தை கொண்டு சிதம்பரம் சேர்த்ததாக ஒரு சொத்து குறித்து ஒரே ஒரு ஆதாரத்தை அமலாக்கத்துறை வெளியிடமுடியுமா? சிதம்பரத்தின் பெயரில் ஒரு சொத்தை இவர்கள் காட்டட்டும் நான் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்" என்றார்.

இது என்ன சம்பந்தம்
அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஸார் மேத்தா சிதம்பரத்திற்கு கணக்கு உள்ளது என்றார். அதற்கு கபில் சிபல், ஆமாம் டுவிட்டரில் கணக்கு உள்ளது. இதை நான் சொல்லவில்லை. சிபிஐ காவலில் உள்ள சிதம்பரத்திடம் உங்களுக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதா என கேட்டுள்ளனர். வங்கி கணக்கிற்கும் டுவிட்டர் கணக்கிற்கும் என்ன சம்மந்தம் என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார். அப்போது நீதமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications