புட்டு புட்டு வைத்த கபில் சிபல்.. அமித்ஷாவுக்கு பதிலடி.. என்னாது, பிஜேபி ஆட்சியில் இத்தனை கலவரங்களா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக ஆட்சியில் கலவரம் நடக்காது என்ற அமித்ஷாவின் பேச்சு இன்னொரு பொய்யான வாக்குறுதி என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.. கடந்த காலங்களில் நடந்த சில கலவரங்களை லிஸ்ட் போட்டு கபில் சிபல் தெரிவித்துள்ளது, பாஜகவை எரிச்சலடைய வைத்து வருகிறது.
கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த ராம நவமி கொண்டாட்டங்களின்போது, நாட்டின் சில மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த வன்முறை சம்பவம் அதிகம் காணப்பட்டன.. குறிப்பாக, பீகார் மாநிலத்தின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதிகளில் கோரமான மோதல்கள் நடந்தன.

 நிதிஷ் நிதிஷ்

நிதிஷ் நிதிஷ்

இந்த வன்முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் தொடர் ரோந்து பணிகளிலும், கண்காணிப்பில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகாரின் சஸாரம் பகுதியில் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், வன்முறை சம்பவங்களால் தடை சட்டம் போடப்பட்டதால் வருகை ரத்து செய்யப்பட்டது. வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தை அரசு வழங்கியதுடன், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் காவல்துறை உயர்மட்டக் கூட்டமும் நடைபெற்று, சம்பந்தப்பட்டவரை அதிரடியாக கைது செய்யும் நடவடிக்கையும் ஆரம்பமானது.

உத்தரவாதம்

உத்தரவாதம்

எனினும், இந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தின் ஹிசுவா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது வரப்போகும் எம்பி தேர்தலை மையப்படுத்தியே அமித்ஷாவின் பேச்சு இருந்தது.. அதிலும் அடுத்த, பிரதமர் மோடிதான் என்று கூறிய அமித்ஷா, பீகாரில் கலவரக்காரர்களை ஒடுக்கி, மாநிலத்தின் நிலைமையே தலைகீழாக மாற்றப்படும் என்றும் உத்தரவாதம் தந்து பேசியிருந்தார்.

 தலைகீழ் மாற்றம்

தலைகீழ் மாற்றம்

அமித்ஷா பேசும்போது, "வரும் 2024-ம் ஆண்டு எம்பி தேர்தலில் பிரதமர் மோடி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறட்டும். பீகாரில் 40-க்கு 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறவும், 2025-ம் ஆண்டு மாநில தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கவும் உதவி செய்யுங்கள்... அதற்கு பிறகு, இங்கு கலவரக்காரர்களை ஒடுக்கி, மாநிலத்தின் நிலைமையே தலைகீழாக மாற்றப்படும்... பாஜக ஆட்சியில் ஒருபோதும் கலவரங்கள் நடைபெறாது" என்று பேசியிருந்தார்.. அமித் ஷாவின் இந்த பேச்சைதான், மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் காட்டமாக விமர்சித்துள்ளார். புட்டு புட்டு வைத்த கபில் சிபல்.. அமித்ஷாவுக்கு பதிலடி.. என்னாது, பிஜேபி ஆட்சியில் இத்தனை கலவரங்களா?

 ப்ராமிஸ்

ப்ராமிஸ்

இதை பற்றி கபில் சிபல் சொல்லும்போது, "பாஜக ஆட்சியில் கலவரங்களே நடக்காது என்று இன்னொரு பொய்யான வாக்குறுதியை அமித்ஷா கூறியிருக்கிறார்... கடந்த 2014 - 2020 ஆண்டுகளுக்கு இடையில் 5,415 கலவரங்கள் நடந்துள்ளதாக என்சிபிஆர் மூலம் தகவல் தெரிய வருகிறது. ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 9 கலவரங்கள் நடந்திருக்கின்றன.. அதேபோல மகாராஷ்டிராவில் 4, மத்தியப்பிரதேசத்தில் 2 என்று கிட்டத்தட்ட 25 வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளன... 2021-ம் ஆண்டு ஹரியானாவிலும், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் 2022 ஏப்ரலில் அதிக அளவிலான கலவரங்கள் நடந்துள்ளன" என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

 கப்சிப் மோடு

கப்சிப் மோடு

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ராமநவமியில் நடந்த கலவரம் தொடர்பாக கபில் சிபல் கூறும்போது, "மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் ராம நவமியை ஒட்டி நடந்த வகுப்புவாத கலவரம் குறித்து பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்? இத்தகைய கலவரங்களுக்கு 2024-ம் ஆண்டு தேர்தல் ஒரு காரணமாக அமைந்துவிடக்கூடாது, இருக்கக் கூடாது என்று காட்டமாக கூறியிருந்ததையும், பாஜக கவனிக்கவே செய்தது.. இப்போது, மத்தியிலும், சில மாநிலங்களிலும் நடந்த கலவரங்களை புட்டு புட்டு வைத்திருப்பது, பாஜக மேலிடத்துக்கு மேலும் கடுப்பையும், எரிச்சலையும் தந்து வருகிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+