சிறுமி பலாத்காரம்: டெல்லியில் பதுங்கிய எடியூரப்பா.. கைது செய்ய விரட்டி வந்த கர்நாடகா சிஐடி டீம்!
டெல்லி: சிறுமி பலாத்கார வழக்கில் டெல்லியில் பதுங்கி இருக்கும் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழுவும் டெல்லியில் முகாமிட்டிருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.
80 வயதாகும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார் என்பது புகார். இதனால் எடியூரப்பா மீது பெங்களூர் சதாசிவ நகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக தம் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாக குமுறினார் எடியூரப்பா. அத்துடன் நிற்காமல் கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும் தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தார் எடியூரப்பா.
இதனிடையே எடியூரப்பா மீது புகார் கொடுத்த, சிறுமியின் தாயார் திடீரென மரணம் அடைந்தார். ஆனால் சிறுமியின் தாயாருக்கு உடல்நலன் பாதிப்பு இருந்தது; நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் இறந்துவிட்டார் எனவும் கூறப்பட்டது.
இந்த பின்னணியில் எடியூரப்பாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தை சிறுமியின் சகோதரர் நாடினார். அதே நேரத்தில் பலாத்கார வழக்கில் எடியூரப்பா விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது கர்நாடகா சிறப்புப் புலனாய்வுக் குழு. இந்த விசாரணைக்கு தம்மால் உடனடியாக ஆஜராக முடியாது; டெல்லியில் இருக்கிறேன்; ஜூன் 16-ந் தேதி ஆஜராகிறேன் என பதிலளித்தார் எடியூரப்பா. மேலும் தம்மை கைது செய்யாமல் இருக்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த பரபரப்புகளுக்கு இடையே எடியூரப்பாவை கைது செய்ய போக்சோ நீதிமன்றம் அதிரடியாக கைது வாரண்ட் பிறப்பித்தது. அதுவும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்ததால் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலைமை உருவானது.
தற்போது எடியூரப்பா டெல்லியில் முகாமிட்டிருப்பதால் கைது வாரண்ட்டுடன் கர்நாடகா சிஐடி போலீசார் டெல்லியில் தங்கி உள்ளனர். டெல்லியிலேயே போக்சோ நீதிமன்ற கைது வாரண்ட் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications