கைநழுவும் முதல்வர் பதவி? கோபத்தில் மைக்கை தட்டிவிட்ட சித்தராமையா! விரட்டும் சிவக்குமாரால் டென்ஷன்
டெல்லி: கர்நாடகா முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி உள்ளது. நேற்று இருவரும் கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேசிய நிலையில் சித்தராமையா கோபத்தில் மைக்கை தட்டிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முதல்வர் பதவி அவரது கைநழுவி செல்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா முதல்வர் பதவிக்கான போட்டி தொடங்கி உள்ளது. முன்னாள் முதல்வரான சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவியை பெற காய்நகர்த்தி வருகின்றனர்.
மேலும் இருவரும் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்து வருகின்றனர். நேற்று மல்லிகார்ஜூன கார்கேவை, டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசினர். அப்போது டிகே சிவக்குமாரும், சித்தராமையாவும் முதல்வர் பதவியை விட்டு கொடுப்பதாக தெரிவிக்கவில்லை. இருவரும் முதல்வர் பதவி கட்டாயம் வேண்டும் என கூறி அடம்பிடிக்கின்றனர்.
குறிப்பாக டிகே சிவக்குமார்,‛‛எனக்கு கொடுத்தால் முதல்வர் பதவியை தாங்க. இல்லாவிட்டால் நான் அமைச்சரவையில் பங்கெடுத்து கொள்ள மாட்டேன். துணை முதல்வர், அமைச்சர் என எந்த பதவியும் எனக்கு வேண்டாம்'' என கறாராக கார்கேவிடம் கூறியுள்ளார். அதேபோல் சித்தராமையாவும் தனக்கு தான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு உள்து. இதனால் எந்த காரணத்தை கொண்டும் முதல்வர் பதவியை விட்டு தர முடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நேற்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் இன்று டெல்லியில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை டிகே சிவக்குமார், சித்தராமையாவிடம் மேலிட தலைவர்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தான் சித்தராமையா பற்றிய ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நேற்று மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்துவிட்டு சித்தராமையா வெளியே வந்தார்.
அப்போது அவரிடம் பத்திரிகையாளரிடம் ஒருவர், ‛‛மல்லிகார்ஜூன கார்கே உடனான சந்திப்பில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா?'' என கேள்வி கேட்டார். அதற்கு சட்டென கோபமடைந்த சித்தராமையா அவர் வைத்திருந்த ஆக்ரோஷமாக 2 முறை தட்டிவிட்டார். மேலும் ‛இதுபற்றி நான் எதுவும் சொல்ல முடியாது'' என கறாராக கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications