கர்நாடக ஹிஜாப் தடைக்கு எதிரான மேல்முறையீடு வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
டெல்லி: கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை உறுதி செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யப்பட்டுவருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா , சுதன்ஷு அடங்கியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி வருகிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் அந்த கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது இஸ்லாமிய மத வழக்கப்படியான ஹிஜாப் அணிந்து வந்தனர்.
ஆனால் ஹிஜாப் அணிய பியூ கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இத்தடைக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்துக்கு எதிராக அதே கல்லூரியில் படிக்கும் இந்து மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் தொடங்கி நாடு முழுவதும் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

கர்நாடகா அரசு தடையும் வழக்கும்
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள்
கர்நாடகா அரசின் ஹிஜாப் அணிய தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரிதான் என்ற கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 6 முஸ்லிம் மாணவிகள் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஆகையால் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தன.

அவசர வழக்கு கோரிக்கை நிராகரிப்பு
கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் ஆஜராகி, ஹிஜாப் வழக்கில் முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் 4 மாதங்களாக நிலுவையில் இருக்கின்றன. ஆகையால் உடனே விசாரிக்க வேண்டும். அல்லது ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்துவிட்டு பின்னர் இவ்வழக்கை விசாரிக்கலாம் என கோரிக்கை வைத்தார். ஆனால் இதனை தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நிராகரித்தார்.

விசாரணை
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் கர்நாடகா அரசின் ஹிஜாப் தடைக்கு எதிராக முஸ்லிம்கள் மாணவிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் போது, மேல்முறையீட்டு மனுக்கள் மீது கர்நாடகா அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஹிஜாப் வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா , சுதன்ஷு அடங்கியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணையை நடத்தி வருகிறது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
தனியாக வாழும் தம்பதிகள்.. உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழக்குகள் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு -
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications