'நீ என்ன பேசுறன்னு எனக்கு புரியல'.. ஹிந்தியில் பேசுனா தமிழில் பதிலடி - கார்த்தி சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை குறித்து தான் பேசியதற்கு ஹிந்தியில் எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு எம்.பி.கார்த்தி சிதம்பரம் தமிழில் பதிலடி கொடுத்துள்ளார்

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை குறித்து பேசிய சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், இந்த உரை மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசாமல் ஆளுங்கட்சியின் குரலாக உள்ளது.

karti chidambaram reply to mps in tamil lok sabha speech

மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் குறித்து தமது உரையில் குடியரசுத் தலைவர் எதுவும் பேசவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அதேபோல், நமது அரசு பாப் பாடகியின் டீவீட்டுக்கு பதில் அளிக்கிறது, உண்மையான புள்ளி விவரங்களுக்கு பதில் தருவதில்லை என்றும் கூறினார்.

அப்போது சில எம்.பிக்கள் கார்த்தி சிதம்பரத்தின் பேச்சுக்கு, ஹிந்தியில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு கூலாக, "நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல" என்று கார்த்தி சிதம்பரம் தமிழில் பதிலடி கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+