டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உஸ்ஸப்பா!.. 106 நாட்கள் கழித்தாவது ஜாமீன் கிடைத்ததே.. பெருமூச்சுவிட்டு கார்த்தி சிதம்பரம் ட்வீட்!

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தனது தந்தையுமான ப. சிதம்பரத்திற்கு இப்போதாவது ஜாமீன் கிடைத்ததே என அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பெருமூச்சுவிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிபிஐ காவலில் இருந்த அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

Karti Chidambaram says atlast after 106 days

இவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் பல முறை இவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகளால் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

இதனால் அவர் வெளியே வருவது சிக்கலானது. இதையடுத்து அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதெல்லாம் செய்தால்.. பெயில் உடனே கேன்சல்.. கவனம்.. ப. சிதம்பரத்திற்கு 5 நிபந்தனைகள்!இதெல்லாம் செய்தால்.. பெயில் உடனே கேன்சல்.. கவனம்.. ப. சிதம்பரத்திற்கு 5 நிபந்தனைகள்!

அதில் ப .சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினர். இந்த நிலையில் இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு ட்வீட் போட்டுள்ளார், அதில் எல்லாம் முடிந்தது. கடைசியில் 106 நாட்கள் கழித்தாவது ஜாமீன் கிடைத்ததே என தனது ட்வீட்டில் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

English summary
Sivagangai MP Karti Chidambaram says that Phew. At last after 106 days as his father P Chidambaram gets conditional bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X