Vijay CBI: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு! டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! என்னென்ன கேள்விகள்?
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் ஏற்கெனவே இரு முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது 3ஆவது முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

டெல்லி பயணம்
இந்த வழக்கின் 3-வது கட்ட விசாரணைக்காக விஜய்க்கு கடந்த 10ஆம் தேதியே சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. முன்னதாக, தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி விசாரணைக்கு விலக்கு அளிக்கவோ அல்லது சென்னையில் விசாரணை நடத்தவோ விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், டெல்லி தலைமையகத்திலேயே ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, நேற்று மாலை தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றடைந்தார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
இன்று காலை 10.45 மணியளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம், கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப உள்ளதாகத் தெரிகிறது:
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக மக்கள் கூடியதற்கு யார் பொறுப்பு?
- கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் உரையைத் தொடர்ந்தது ஏன்?
- பாதுகாப்பு ஏற்பாடுகளில் எங்கே குளறுபடி ஏற்பட்டது?
- சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த விபரங்கள்.
விசாரணையின்போது ஏற்கனவே கேட்கப்பட்ட கூடுதல் ஆவணங்களையும் விஜய் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், த.வெ.க. தலைவரிடம் சி.பி.ஐ. நடத்தும் இந்தத் தொடர் விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணை மாலை வரை நீடிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் நாளையும் தொடர வாய்ப்புள்ளதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் முடிவை பொறுத்து விஜய் எப்போது சென்னை திரும்புவார் என தெரியவரும்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications