Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் தொடங்கி தேசியளவில் பல தலைவர்களும், மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்கி ஆதரவு கரமும் நீட்டி வருகிறார்கள். இந்நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல மக்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என்று பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

karur-stampede-incident-pm-announced-relief-for-the-victims

தலைவர்கள் ஆறுதல்

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதலமைச்சர் ஸ்டாலின், பல மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கரூருக்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நிவாரணம்

இந்நிலையில் கரூர் மக்களுக்கு பிரதமர் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நிவாரண நிதியில் இருந்து கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+