காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு.. எப்போது தொடங்குகிறது.. எப்படி விண்ணப்பிப்பது?
டெல்லி: காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு வரும் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் வாரணாசி இடையே உள்ள பழமையான தொடர்புகளை கொண்டாடவும் மீண்டும் உறவுகளை உறுதிப்படுத்தவும் நடத்தப்படுவதுதான் காசி தமிழ் சங்கமம். இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்முறையாக தொடங்கப்பட்டது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய கல்வி அமைக்கத்தின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ் இந்த நிகழ்ச்சிக்கு நிதியுதவி அளித்தது.
அது போல் காசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சகமும் இயக்கியது. ஒரு மாதம் நடந்த இந்த நிகழ்வில் சிறப்பு ரயில்களின் வாயிலாக தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் வாரணாசியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலை, பண்பாடு, உணவு போன்ற கலாசாரம் தொடர்புடைய பரிமாற்றங்களும் நடந்தன.
இந்த தமிழ் சங்கமம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இரண்டாம் கட்ட நிகழ்வு டிசம்பர் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக தமிழகம், புதுவையில் இருந்து 1,400 பேர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயிலில் அழைத்து செல்லப்படவுள்ளனர்,
இதற்காக 8 நாட்களுக்கான பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இலக்கியம், ஆன்மீகம், கலை சார்ந்த கருத்தரங்குகள், விவாதங்கள், பயிற்சி பட்டறைகள் போன்றவை நடத்தப்படும். தமிழகம் மற்றும் காசியின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் உள்ளிட்ட சிறப்பு தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இந்த காசி சங்கமம் நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர், சென்னை ஐஐடி சார்பில் பிரத்யேகமாக உருவாக்கி இருக்கும் www.kashitamil.iitm.ac.in./ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications