“கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த இந்த ஆண்டு ரூ.1673 கோடி ஒதுக்கீடு” - ரயில்வே அமைச்சர் தகவல்!
டெல்லி: ரயில்வே கட்டமைப்பில் கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த 2025-26ல் ரூ.1673.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 2025 அக்டோபர் வரை கவாச் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நிதி ரூ.2,354.36 கோடி என்றும் மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, எம்.பிக்களின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அப்போது அவர், "2014 ஆம் ஆண்டுக்கு முன், முந்தைய ஆட்சி காலத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.100 கோடி மட்டுமே பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் அது பல மடங்கு அதிகரித்து உள்ளது.

ஐரோப்பிய நாடுகளை விட இந்திய ரயில்வேயின் நேரம் கடைபிடிப்பு சிறப்பாக உள்ளது. இந்திய ரயில்வேயின் நேரம் கடைபிடிப்பு ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவையின் தாக்கத்தை எடுத்துரைக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளை விட இந்திய ரயில்வே சரியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
உத்தர பிரதேசத்தில், ரயில்வே திட்டங்களுக்கான பட்ஜெட்டை பிரதமர் உயர்த்தியுள்ளார், இது ஒரு வரலாற்று நடவடிக்கை. வரலாற்று கலாசார இணைப்புகளைக் கொண்ட பாலியா ரயில் நிலையத்திலிருந்து 82 ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால் ரயில்வே கீழ் பாலங்கள் மற்றும் மேம்பாலங்களில் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக மேம்பாலங்களுக்காக 100 க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில்வே கட்டமைப்பில் கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த 2025-26ல் ரூ.1673.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 2025 அக்டோபர் வரை கவாச் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நிதி ரூ.2,354.36 கோடி என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications