நாங்க முடிச்சுட்டோம்.. அங்க இன்னும் சத்தத்தையே காணோமே! தொகுதி பங்கீட்டில் பாஜகவை கலாய்த்த காங்கிரஸ்
டெல்லி: இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு உத்தரப் பிரதேசம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏன் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி இன்னும் பீகாரிலும், மகாராஷ்டிராவிலும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவில்லை என காங்கிரசின் வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர் வரும் லோக்சபா தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு முக்கியமானதாகும். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் என்று யாரும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல, இந்தமுறை இந்தியா கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. வழக்கமாக லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இம்மாநிலத்தில் முதன் முறையாக இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு சமீபத்தில் இறுதி செய்யப்பட்டது.

அதேபோல இன்று காலை டெல்லி, குஜராத் என 5 மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை காங்கிரசும், ஆம் ஆத்மியும் வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் - காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. குஜராத்தில் காங்கிரஸ் 24 - ஆம் ஆத்மி 2, ஹரியானாவில் காங்கிரஸ் 9 - ஆம் ஆத்மி 1, கோவாவில் காங்கிரஸ் 2, சண்டிகரில் காங்கிரஸ் 1 என 4:3 என்கிற விகிதத்தில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தேர்தலை எதிர்கொள்கின்றன.
மட்டுமல்லாது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து ராகுல் காந்தி கோரிக்கையை எழுப்பி வருகிறார். இது எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ராகுல் காந்தியின் இந்த கோரிக்கை, இந்தியா கூட்டணியுடன் களத்தில் இறங்கியிருப்பது போன்றவை காங்கிரசுக்கான வெற்றி வாய்ப்புகளாக பார்க்கப்படுவதாகவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளரான கே.சி.வேணுகோபால், இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டை தொடங்கிவிட்டது. ஆனால் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஏன் இன்னும் பீகாரிலும், மகாராஷ்டிராவிலும் தொகுதி பங்கீட்டை தொடங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் என இரண்டு மாநிலங்களை எடுத்துக்கொண்டால் மொத்த எம்பி தொகுதிகளின் எண்ணிக்கை 120. லோக்சபா தேர்தலில் வெற்றிபெற இந்த இரண்டு மாநிலங்களும் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் பீகாரில் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தள் கட்சியுடன் பாஜக இன்னும் தொகுதி உடன்பாட்டை முடிக்கவில்லை.
அதேபோல மகாராஷ்டிராவை சேர்த்துக்கொண்டால், மூன்று மாநிலங்களில் மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 168ஆக உயரும். ஆனால் மகாராஷ்டிராவிலும், இன்னும் பேச்சுவார்த்தையை பாஜக இறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications