இளைஞர்களுக்கு முக்கியத்துவம்! பாஜகவின் அடுத்த 25 ஆண்டு ‛மெகா பிளான்’.. பிரதமர் மோடி உரை
டெல்லி: ‛‛வரும் பாராளுமன்ற தேர்தல், அடுத்த 25 ஆண்டுகாலத்தை மனதில் வைத்து 4 மாநிலங்களில் புதிய அரசு அமைக்க வேண்டும். மேலும் பாஜக மற்றும் நாட்டுக்கான எதிர்கால தலைமையை உருவாக்க இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ல் வெளியாகின. இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது.
மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த 4 மாநிலங்களில் முதல்வர், அமைச்சர்களை தேர்வு செய்வதில் பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அதிக கவனம்
இந்த 4 மாநிலங்களில் முதல்வர், அமைச்சர்களை நியமிப்பதில் பாஜக மேலிடம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உத்தர பிரதேசத்துக்கு மட்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பிற 3 மாநிலங்களில் முதல்வர் வேட்பாளர் இறுதியில் தான் தெரியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த 4 மாநிலங்களில் அமைச்சர்களை தேர்வு செய்ய அங்கு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர்களின் பட்டியல், அவர்களின் முழு விபரங்களையும் பாஜக மேலிடம் கேட்டுள்ளது.

மோடியின் ஆர்வம்
இந்த 4 மாநில அமைச்சரவையில் இளம்வயதினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். பாஜகவின் அடுத்த 25 ஆண்டுகால தலைவர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். மேலும் இந்த விருப்பத்தை அவர் தனது கட்சியினரிடம் கூறியுள்ளார். அதாவது, "அடுத்த 25 ஆண்டுகளில் பாஜக மற்றும் நாட்டிற்கு தலைமைத்துவத்தை உறுதி செய்வதற்கு இளைஞர்கள் அவசியம். இதனால் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன கணக்கீடு
மேலும் இளைஞர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் பாஜகவுக்கான சிறந்த தலைவர்களை கண்டறிய முடியும் என கட்சி மேலிடம் நம்புகிறது. இதனால் 4 மாநில அமைச்சர்கள் நியமனத்தில் ஜாதி, பிராந்தியம் கவனத்தில் கொண்டாலும் கூட இளம் வயதினருக்கு அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

கல்வி தகுதி
புதிய அமைச்சர்களாக தேர்வாகும் நபர்களின் கல்வி தகுதி, செல்வாக்கு, அரசியல் செயல்பாடு, ஜாதி கட்டமைப்பு உள்பட பல்வேறு அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவை உள்பட அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்
இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதன் மூலம் வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் துடிப்புடன் செயல்படுவார்கள். இது பாஜகவின் எதிர்கால ஆட்சியை உறுதி செய்ய வசதியாக இருக்கும் என பாஜக மேலிடம் கருதுகிறது. மேலும் ஒவ்வொரு எம்பிக்களும் தங்களது தொகுதியில் பாஜகவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்காத 100 வாக்குச்சாவடிகளை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்கு ஓட்டுக்கள் குறைந்ததற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என ஒவ்வொரு எம்பிக்களுக்கும் பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பே பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications