பாஜகவுக்கு எதிராக ஆதரவு திரட்டும் கெஜ்ரிவால்.. ராகுல் காந்தியை இன்று சந்திக்க திட்டம்? பரபர பின்னணி
டெல்லி: டெல்லி அரசு அதிகாரிகள் நியமன விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று ராகுல் காந்தியை சந்திக்க கெஜ்ரிவால் திட்டமிட்டு இருக்கிறார்.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசுக்கு உள்ளன. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு, இந்த கருத்து மோதல் உச்சத்தை அடைய வழி வகுத்தது. அதாவது, டெல்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.
இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு தான் அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. ஆனால், அதற்கு மறுநாளே உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்து போக செய்யும் விதமாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வரும் கெஜ்ரிவால் மாநிலங்களவையில் அவசர சட்டம் வரும் போது அதற்கான ஆதரவை திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார்,மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை சந்தித்து மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். சரத் பவாரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், " ராகுல் காந்தி மற்றும் கார்கேவை சந்திக்க முறைப்படி நேரம் கேட்டு இருக்கிறேன். ராகுலை சந்திக்கும் போது டெல்லி விவகாரம் குறித்து பேச இருக்கிறேன்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications