பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளா அரசு தீர்மானம்.. 2 முக்கிய திருத்தங்களுடன் உடனே நிறைவேற்றம்!
டெல்லி: பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரள மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளன்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் இன்றி அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று கேரள சட்டசபை மீண்டும் கூடியது.

இதில் மத்திய பாஜக அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீர்மானம் கொண்டு வந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை விதி எண் 118இன் கீழ் தாக்கல் செய்தார். பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பினராயி விஜயன், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்திய அரசியலமைப்பின் மதசார்பற்ற தன்மை வீழ்த்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், பாஜக உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஆதரவு தெரிவித்தார். அதேசமயம், இந்த தீர்மான வரைவின் இறுதி பகுதியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை ஏற்று, தீர்மான வரைவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்ட தீர்மான வரைவில் இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்த பின்னர் இறுதித் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக மிசோரமை தொடர்ந்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், மிசோரம் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது மாநிலமாக கேரளாவில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த பொது சிவில் சட்டம், சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருப்பதாகக் குற்றம்சாட்டி பல்வேறு எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications