"1.6 கிமீ தூரம்.. 32 நொடிகள்.." ஏர் இந்தியா விபத்து ரிப்போர்ட்.. இந்த 9 பாயிண்டுகள் தான் முக்கியமே!
டெல்லி: கடந்த மாதம் அரங்கேறிய ஏர் இந்தியா விபத்து இந்திய ஏவியேஷன் உலகின் மிக மோசமான விபத்துகளில் ஒன்று என்றே சொல்லலாம். இதற்கிடையே விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. மொத்தம் 15 பக்கங்களைக் கொண்ட இந்த முதற்கட்ட விசாரணை முடிவுகளில் 9 முக்கியமான பாயிண்டுகள் இடம்பெற்றுள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
குஜராத்திலுள்ள விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி மதியம் 1.30 மணியளவில் விமானம் புறப்பட்டுள்ளது. அந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்தது. இருப்பினும், விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே அது விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டனர்.

ஏர் இந்தியா ரிப்போர்ட்
விமானம் கீழே இருந்த விடுதி ஒன்றில் மோதி விபத்திற்குள்ளானது. விடுதியில் இருந்தவர்கள், பயணிகள் என மொத்தம் 260 பேர் இந்த விபத்தில் கொல்லப்பட்டனர். இதற்கிடையே விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு முதற்கட்ட ரிப்போர்ட்டை சமர்ப்பித்துள்ளது. அந்த 15 பக்க ரிப்போர்ட்டில் இருக்கும் முக்கியமான 9 பாயிண்டுகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
9 பாயிண்டுகள்
1. விமானத்தில் புறப்பட்ட சில நொடிகளில் இரண்டு என்ஜின்களும் நடுவானில் செயலிழந்தன. அதன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் அடுத்தடுத்த நொடியில் RUN என்ற நிலையில் இருந்து CUTOFFக்கு மாறின. என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதை இது காட்டுகிறது.
2. அப்போது ஒரு பைலட் ஏன் விமானத்திற்கான எரிபொருளை நிறுத்தினீர்கள் எனக் கேட்பதும் அதற்கு மற்றொரு விமானி "அதை நான் செய்யவில்லை" என்று சொல்வதும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது.
3. என்ஜின்கள் பவரை இழந்தபோது, அவசரக்கால ஹைட்ராலிக் சக்தியை வழங்க ஒரு சிறிய உந்துவிசை போன்ற சாதனமான ராட் தானாகவே பயன்படுத்தப்பட்டது. ஏர் இந்தியா விபத்து குறித்துப் பரவிய வீடியோவிலேயே ராட் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. வீடியோக்களிலும் ராட் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
32 நொடிகள்
4. விமானிகள் என்ஜினை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயன்றனர். என்1 அல்லது என்ஜின் 1 ஓரளவு ஸ்டார்ட் ஆனது, ஆனால் என்ஜின் 2 மீண்டும் ஸ்டார்ட் ஆகவே இல்லை. விமானம் 32 வினாடிகள் மட்டுமே பறந்த நிலையில், அது ஓடுபாதையிலிருந்து 0.9 NM அதாவது சுமார் 1.6 கிமீ தொலைவில் இருந்த விடுதியில் மோதியது.
5. திரஸ்ட் லிவர் செயலற்ற நிலையில் காணப்பட்டன, ஆனால் பிளாக் பாக்ஸ் புறப்படும் திரஸ்ட் இன்னும் செயல்பாட்டில் இருந்தது போலக் காட்டியது. இரு கருவிகளுக்கும் இடையே செயலற்ற நிலை இருப்பதையே இது காட்டுகிறது.
எரிபொருளில் சிக்கல் இல்லை
6. எரிபொருளில் எந்தவொரு மாசுபாடும் இல்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் எரிபொருள் நிரப்பும் இடத்திலும் எந்தவொரு மாசுபாடும் இல்லை.
7. இறக்கை அமைப்பு (5 டிகிரி) மற்றும் கியர் (கீழ்நோக்கி) புறப்படுவதற்கு முன்பு இயல்பாக இருந்தன. பறவை நடமாட்டம் அல்லது வானிலை பிரச்சினைகள் இல்லை - தெளிவான வானம், நல்ல விசபிலிட்டி, லேசான காற்று எனச் சரியான காலநிலையே இருந்தது.
நாசவேலை இல்லை
8. விமானிகளும் விமானத்தை இயக்கும் அளவுக்கு ஃபிட்டாகவே இருந்தனர். இருவரும் மருத்துவ ரீதியாக ஃபிட்டாகவும் போதுமான ஓய்வு பெற்றிருந்தனர். அவர்கள் தேவையான அனுபவத்தையும் பெற்றிருந்தன.
9. முதற்கட்ட விசாரணையில் நாசவேலை என்பதற்கான சான்று எதுவும் இல்லை.. ஆனால் எரிபொருள் சுவிட்சில் குறைபாடு இருப்பது தெரிகிறது. விமானத்தின் எடையும் கூட வழக்கமானதாகவே இருந்துள்ளது. அதில் ஆபத்தான பொருட்களும் எதுவும் இல்லை.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications