தொடரும் கண்ணாம்பூச்சி ஆட்டம்! தப்பிக்க அம்ரித்பால் போட்ட முக்கிய ப்ளான்.. மோப்பம் பிடித்த உளவுத்துறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதி அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய காவல்துறையினர் தீவிர முயற்சி செய்து வரும் நிலையில், அவர் நேபாளத்திற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. தனிநாடு கோரிக்கையை மையமாக வைத்து பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முக்கியமான அமைப்புதான் 'வாரிஸ் பஞ்சாப் டி' எனும் அமைப்பு. இதன் தலைவராக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வருகிறார். சர்தேச நாடுகளுக்கு அதிக அளவில் புலம்பெயர்ந்த மாநில மக்கள் பஞ்சாபிகள்தான். இப்படியாக வெளிநாட்டில் வேலை செய்துக்கொண்டு இந்த காலிஸ்தான் அமைப்பினருக்கு ஆதரவாக பொருளாதார உதவியையும் அவர்கள் செய்து வருவதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இப்படி இருந்த நிலையில்தான் அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் ஒருவரை அம்மாநில காவல்துறை கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்தது. இது அம்மாநிலம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் இதுவரை யாரும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பினர் மீது கை வைத்தது கிடையாது. ஆனால் இப்படி இருக்கையில் இந்த அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் உதவியாளரை கைது செய்தது இந்த அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

போராட்டம்

போராட்டம்

கைது செய்யப்பட்ட உதவியாளரை விடுவிக்க வேண்டும் என அமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இதனை கண்டுக்கொள்ளவில்லை. எனவே இந்த அமைப்பினர் காவல் நிலையத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். தொடக்கத்தில் சிறயதாக இருந்த பேரணி, காவல் நிலையத்தை நெருங்கியபோது ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் வாள், கத்தி உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தனர். உதவியைாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்த நிலையில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

கரும்புள்ளி

கரும்புள்ளி

இந்த போராட்டம் அம்மாநில காவல்துறை வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக உருவானது. இதையடுத்து இந்த போராட்டத்திற்கு தலைமையேற்ற வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது. இதை அறிந்துக்கொண்ட அம்ரித்பால் சிங் தலைமறைவாகினார். காவல்துறை திட்டம் இவருக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது என்பது தற்போது வரை மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. முதலில் பஞ்சாபில்தான் ஏதாவது ஒரு இடத்தில் தலைமறைவாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டு வந்த நிலையில் அவர் பக்கத்து மாநிலமான ஹரியானாவிற்கு தப்பி சென்றுவிட்டார்.

அம்ரித்பால் சிங்

அம்ரித்பால் சிங்

யாரும் உதவாமல் இவரால் இப்படி தப்பியிருக்க முடியாது என்பதை உணர்ந்த காவல்துறையினர் அம்ரித்பால் சிங்கின் உதவியாளர்கள், நண்பர்கள் என பலரையும் கைது செய்தது. ஆனாலும் அம்ரித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தப்பியோடியதாக பல சிசிடிவி காட்சிகள் வெளி வந்துள்ள நிலையில் காவல்துறையினர் இது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் தீவிரமாக இருந்த நிலையில், ஒரு முக்கிய தகவல் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது அம்ரித்பால் சிங்க் நேபாளத்திற்கு தப்பி செல்ல இருக்கிறார் என்பதுதான் அந்த தகவல்.

மாறுவேடம்

மாறுவேடம்

எனவே உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் உள்ள இந்தியா-நேபாள் எல்லையில் கண்காணிப்பு பணிகளை காவல்துறையினரும், எல்லை பாதுகாப்புப் படையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுவாக ஜீன்ஸ் பேண்ட், கோட் உடையில் இருக்கும் அம்ரித்பால் தற்போது மாறுவேஷம் போட்டிருக்கிறார். அதாவது சாமியார் போல உடையணிந்து முகம் தெரியக்கூடது என்பதற்காக குடையுடன் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து அவரது புகைப்படத்தை போஸ்டராக அடித்து நேபாள எல்லையில் உள்ள கிராமங்களில் காவல்துறையினர் ஒட்டியுள்ளனர்.

 தப்பிக்க திட்டம்

தப்பிக்க திட்டம்

சமீபத்தில் கிடைத்த உளவுத்துறை தகவலின்படி அம்ரித்பால், டெல்லியின் பேருந்து முனையத்திலிருந்து சாலை வழியாக நேபாளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து டெல்லியின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் கூறுகையில், பஞ்சாபில் அமைதியை நிலைநாட்ட பகவந்த் மான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+