வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவால் நாளுக்கு நாள் வலுவடைகிறோம்.. விவசாய சங்கங்கள்!
டெல்லி: எங்கள் போராட்டத்திற்கு வெளிநாட்டுப் பிரபலங்கள் ரிஹான்னா, கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோரின் இருந்து ஆதரவு கிடைத்திருப்பதால் நாங்கள் நாளுக்கு நாள் வலுவடைகிறோம் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை. விவசாயிகளுக்கு பாதகமான 3 சட்டங்களையும் திரும்ப பெறும் வரை டெல்லியை விட்டு செல்ல மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்களான பாப் பாடகி ரிஹான்னா, பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாய சங்கங்கள் கூறுகையில், விவசாயிகளின் இயக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. வெளிநாட்டு பிரபலங்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மகா பஞ்சாயத்துகளுக்கு கிடைத்த பேராதரவை அடுத்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானாவில் மகா பஞ்சாயத்துகளை நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
வரும் காலத்தில் பெரிய அளவிலான விவசாயிகள் டெல்லிக்கு வருகை தருவர். அரசின் செயல்பாடுகளால் பால்வால் எல்லையில் விவசாயிகள் தர்னா போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே இணையதள சேவைகளை முடக்கிய அரசு, போராட்டக் களங்களில் ஊடகங்களின் வரவையும் தடுத்து கொண்டிருக்கிறது என விவசாய அமைப்புகள் தெரிவித்தன.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications