150 மி.கி விந்தணு, 4 திருமணம், ரெட் லைட் ஏரியா.. கொல்கத்தா மருத்துவர் கொலை! பரவும் தகவலும் உண்மையும்
டெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதில் சஞ்சய் ராய் என்ற நபர் கைதாகியுள்ள நிலையில், அவரை பற்றி இணையத்தில் பல வித தகவல்கள் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவுக்குச் செய்திகள் உலா வருகின்றன. இதற்கிடையே சஞ்சயின் குடும்பத்தினர் இது குறித்துப் பேசியுள்ளனர். அதை நாம் விரிவாக பார்க்கலாம்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சஞ்சாய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தகவல்கள்: பெண் மருத்துவரைப் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அந்த நபர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பு கூறுகிறது. அதேநேரம் சமூக வலைத்தளங்களில் அதற்கு நேர்மாறாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. பெண் மருத்துவர் உடலில் 150மிமீ விந்தணு இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக ஒரு தகவல் பரவியது. அதேபோல கைதாகியுள்ள சஞ்சய் ராய் நான்கு முறை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இன்னும் சிலர் அவர் ஆபாசப் படங்களுக்கு அடிமையாக இருந்ததாகவும் அடிக்கடி ரெட் லைட் பகுதிக்குச் சென்று வந்ததாகவும் கூட தகவல் பரவியது.
மேலும், அவர் காவல் துறையில் தன்னார்வலராக மட்டுமே பணியாற்றினாலும் கூட, தன்னை போலீஸ் போல கட்டிக் கொண்டதாகவும் குற்றம் நடந்த ஆர் கார் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றதாகவும் எல்லாம் தகவல் பரவின. இதில் எது உண்மை.. எது பொய் என்பது குறித்து பலருக்கும் குழப்பம் இருந்தது. இதற்கிடையே இது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதான சஞ்சய் குடும்பத்தினரே இதை கூறியுள்ளனர்.
எது உண்மை: முதலில் சஞ்சய் ஒரு தன்னார்வலராக இருந்த போதும் அவர் காவலரை போலவே சுற்றி வந்து இருக்கிறார். தனது பைக்கில் கொல்கத்தா போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்ட அவர், கொல்கத்தா போலீஸ் என்ற டீ சர்ட்டை போட்டுக் கொண்டு தான் எப்போதும் இருப்பாராம். மேலும், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு நோயாளிகளிடம் படுக்கைகளை ஏற்பாடு செய்வதற்கும், பரிசோதனைகள் செய்வதற்கும் லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
கைதான சஞ்சயின் தாயார் இது தொடர்பாகக் கூறுகையில், "அவன் என்னுடன் தான் தங்கி இருந்தான். ஆனால், கடைசி சில மாதங்கள் போலீசாருடன் இருக்கத் தொடங்கிவிட்டான். இந்தக் குற்றத்தை அவன் தனியாகச் செய்திருக்க வாய்ப்பு இல்லை. பலருக்கு இதில் தொடர்பு இருக்கும். எனது மகனைச் சிக்க வைத்து இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவன் அப்பா இறந்ததும் அவன் தான் குடும்பத்தைக் கவனித்து வந்தான்" என்றார்.
மேலும், சஞ்சய் ராயின் 2வது மனைவி கருவுற்று இருந்த போது உயிரிழந்தது உண்மை தான் என்ற போதிலும் அவர் கேன்சர் காரணமாகவே உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். அதேநேரம் சஞ்சய் ராயின் மூத்த சகோதரி வேறு விதமான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
எத்தனை திருமணம்: அவர் கூறுகையில், "எனக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் ஆனது. என் திருமணத்தைத் தந்தை எதிர்த்ததால் நான் இங்கு வரவே இல்லை" என்றார். தொடர்ந்து இணையத்தில் பரவும் தகவல்கள் குறித்துப் பேசுகையில், "அவனுக்கு 2 திருமணங்கள் நடந்தது உண்மை. இரண்டு மனைவிகளையும் நான் பார்த்து இருக்கிறேன். ஆனால், 4 பேரை கல்யாணம் செய்ததாகச் சொல்வதில் எனக்குத் தெரிந்து உண்மை இல்லை.
மேலும், சஞ்சய் இந்த குற்றத்தைச் செய்திருப்பான் என நம்ப முடியவில்லை. இதன் பின்னணியில் வேறு சிலர் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் அவன் இந்தக் குற்றத்தைச் செய்திருந்தால் நிச்சயம் அவனைத் தண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இல்லை" என்றார்.
கொல்கத்தா போலீஸ்: பயிற்சி மருத்துவரின் உடலில் 150 மிமீ அளவுக்கு விந்தணு இருந்ததாகத் தகவல் பரவிய நிலையில், அதற்குக் கொல்கத்தா போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சுப்ரீம் கோர்டில் இந்த வாதம் முன்வைக்கப்பட்ட போதும் கூட, சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை வைத்து எல்லாம் நீதிமன்றத்தில் வாதமாக வைக்கக் கூடாது என்று நீதிபதிகளும் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் குற்றம் நடந்த நாளில் ரெட் லைட் ஏரியாவுக்கு சென்றது உண்மை தான் என கொல்கத்தா போலீசார் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications