உலகளவில் வெடித்த போராட்டம்.. சர்வதேச அளவில் பூதாகரமானதாக மாறும் கொல்கத்தா மருத்துவர் படுகொலை!
டெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தைக் கண்டித்து இதுநாள் வரை நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்த நிலையில், இப்போது அது சர்வதேச அளவில் வெடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 25+ நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன.
கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பின.

கொல்கத்தா பலாத்காரம்: இதற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இப்போது அது சர்வதேச அளவில் வெடித்துள்ளன. நேற்றைய தினம் சுமார் 25 நாடுகளில் 130க்கும் மேற்பட்ட நகரங்களில் கொல்கத்தா பலாத்கார சம்பவத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. இதில் பல ஆயிரம் புலம்பெயர்ந்த இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
ஜப்பான், ஆஸ்திரேலியா, தைவான் மற்றும் சிங்கப்பூர் என்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் பெரிய மற்றும் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்தன. ஆசிய நாடுகள் மட்டுமின்றி பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா முழுக்க போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இப்போது அது உலகெங்கும் வெடித்துள்ளன.
போராட்டங்கள்: ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மிகப் பெரிய பெரியளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அங்குள்ள செர்கெல்ஸ் டோர்க் சதுக்கத்தில் கறுப்பு உடை அணிந்த பெண்கள் பெங்காலி மொழியில் பாடல்களைப் பாடி, இந்தியப் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனச் சொல்லி முழக்கங்களை எழுப்பினர்.
அங்குப் போராட்டத்தில் கலந்து கொண்ட தீப்தி ஜெயின் கூறுகையில், "பணியில் இருந்த இளம் பயிற்சி மருத்துவர் மருத்துவமனையிலேயே வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர குற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது" என்றார். இப்போது பிரிட்டன் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள தீப்தி ஜெயின், கொல்கத்தாவில் தான் மருத்துவம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ: கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி பலாத்கார விவகாரத்தை முதலில் அம்மாநில போலீசார் தான் விசாரித்தனர். இருப்பினும், இந்த விவகாரத்தை அவர்கள் சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இதுவரை சஞ்சய் ராய் என்ற நபர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், இதில் கூட்டுப் பலாத்காரம் நடந்துள்ளதாகவே பலரும் விமர்சித்தனர். அதைக் கண்டித்தே நாடு முழுக்க போராட்டங்கள் நடந்தன. இருப்பினும், சிபிஐ தரப்பினர் இதுவரை நடத்திய விசாரணையில் கூட்டுப் பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தீப் கோஷ் கைது: அதேபோல சிபிஐ தரப்பினர் குற்றம் நடந்தபோது முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் சந்தீப் கோஷ் பாலியல் குற்றத்திற்காகக் கைது செய்யப்படவில்லை. அவர் ஆர்ஜி கர் மருத்துவமனையில் நடந்த ஊழல் புகாரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications