நாட்டு நாட்டு பாடலுக்கு தென்கொரிய தூதரக அதிகாரிகள் செம டேன்ஸ்..ரசித்த நெட்டிசன்ஸ்..மோடியும் பாராட்டு
டெல்லி: ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தது. இந்த பாடலுக்கும் பலரும் நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் பகிர்வதை காண முடிகிறது. தற்போது டெல்லியில் உள்ள தென்கொரிய தூதர் மற்றும் தூதரக ஊழியர்களும் இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தென்கொரிய தூதரக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆர்.ஆர்.ஆர். படம் வெளியானது.
ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் வெளியான இந்த படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இன்றி சர்வதேச அளவிலும் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது.

தென்கொரிய தூதரக அதிகாரிகள்
ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலும் பெரும் பிரபலம் அடைந்தது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் கிரவாணிக்கு கோல்டன் குளோ விருதும் கிடைத்தது. இந்தப் பாடல் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தது. பலரும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சர்வதேச அளவிலும் இந்த பாடல் பிரபலம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள தென்கொரிய தூதரக ஊழியர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

குர்தா அணிந்தபடி நடனம்
இந்தியாவுக்கான கொரிய தூதர் சங் ஜே போக் மற்றும் தூதரக ஊழியர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு உற்சகமாக துள்ளல் ஆட்டம் போடும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. குர்தா அணிந்தபடி இரண்டு தென்கொரிய தூதரக ஊழியர்கள் முதலில் வீடியோவில் தோன்றி பாடலின் இசைக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர். அதைத்தொடர்ந்து தூதரக வளாகத்தில் உள்ள புல் தரையில் ஊழியர்கள் அனைவரும் இந்த நடனத்தில் பங்கேற்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், தூதரக ஊழியர்கள் இரண்டு பேர் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரைப் போலவே வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கிரே நிறத்திலான பேண்ட் அணிந்து கொண்டு நடனம் ஆடுகின்றனர்.

நாட்டுவை உங்களுக்கு தெரியுமா?
ஒட்டுமொத்த தூதரக ஊழியர்களும் ஜாலியாக இந்த பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. நாட்டுவை உங்களுக்கு தெரியுமா? கொரிய தூதரகத்தின் நாட்டு நாட்டு நடனத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கொரிய தூதரக ஊழியர்களுடன் தூதரக அதிகாரி சங் ஜே போக் இருப்பதை பாருங்கள்.. என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் கொரிய தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரதமர் மோடி பாராட்டு
நெட்டிசன்கள் பலரும் கொரிய தூதரக ஊழியர்களின் நடனத்தை பாரட்டி பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் அற்புதமான குழு முயற்சி என பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதேபோல், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும், கொரிய தூதரக ஊழியர்களின் நடனத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மிக அருமையாக உள்ளது. அனைவரையும் சில ஸ்டெப்களை ஆட தூண்டும் வகையில் உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications