Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த கேவி விஸ்வநாதன் பதவியேற்பு..யார் இவர்? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார், மற்றும் தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கேவி விஸ்வநாதன் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இதையடுத்து, இன்று இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். இதில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அண்மையில் ஓய்வு பெற்றனர். இதனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்துள்ளது.

kv-viswanathan-from-tamil-nadu-who-will-take-office-as-supreme-court-judge-today-who-is-he-full-de

நீதிபதி கே.எம். ஜோசப் ஜூன் 16 ஆம் தேதியும் நீதிபதி அஜய் ரஸ்தோகி ஜூன் 17 ஆம் தேதியும் நீதிபதி வி ராசுப்பிரமணியன் ஜூன் 29 ஆம் தேதியும் நீதிபதி கிருஷ்ண முரளி ஜுலை 8 ஆம் தேதியும் ஓய்வுபெற இருக்கிறார்கள். இதனால் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக குறைந்து விடும். இதையடுத்து உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் இரண்டு பேரை பரிந்துரை செய்தது.

ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கேவி விஸ்வநாதன் ஆகிய இருவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்து செய்து இருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி, இவர்கள் இருவரும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் மூத்த வழக்கறிஞர் கேவி விஸ்வநாதன் தமிழகத்தை சேர்ந்தவர். கோவை சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்பை பயின்ற கேவி விஸ்வநாதன், கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார். குற்றவியல் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், வணிகச் சட்டம், திவால் சட்டம் உள்பட பல்வேறு சட்டம் சார்ந்த வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆஜராகி வாதாடி வருகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்க இருக்கும் கேவி விஸ்வநாதன் வரும் 2030ம் ஆண்டு இவர்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது.

இவருக்கு முன்னதாக இவரது சீனியர் ஜே.பி.பார்த்திவாலாவின் பதவிக்காலம் 2030ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடைகிறது. கே.வி.விஸ்வநாதனின் பணிக்காலம் 2031ம் ஆண்டுதான் நிறைவடையும். எனவே சீனியாரிட்டி அடிப்படையில் கேவி விஸ்வநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்க வாய்ப்பிருக்கிறது.

கேவி விஸ்வநாதன் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வந்தால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகும் 3வது தமிழர் என்ற பெருமையை இவர் பெறுவார். இதற்கு முன்னர் பதஞ்சலி சாஸ்திரி, பி.சதாசிவம் ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+