அண்ணாமலை இல்லை.. மீண்டும் மத்திய அமைச்சராகும் எல் முருகன்? மோடியின் தேநீர் விருந்தில் ட்விஸ்ட்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்கும் எம்பிக்களுக்கு இன்று அவர் தனது இல்லத்தில் வைத்து தேநீர் விருந்து வழங்கினார். இந்த தேநீர் விருந்துக்கு அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் பங்கேற்கவில்லை. மாறாக எல் முருகன் பங்கேற்றார். இதனால் மீண்டும் எல் முருகன் மத்திய அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நரேந்திர மோடி இன்று 3வது முறையாக பிரதமாக பதவியேற்க உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. லோக்சபாவில் தனிப்பெரும்பான்மை பெற 272 எம்பிக்கள் தேவை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மூலம் பாஜகவுக்கு 240 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்.

இதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் ஆதரவில் மத்தியில் இன்று புதிய ஆட்சிஅமைகிறது. பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமாக பொறுப்பேற்க உள்ளார்.
இதனால் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் எம்பிக்கள் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளதால் பாஜகவுடன் சேர்த்து பிற கூட்டணி கட்சிகளின் எம்பிக்களுக்கும் மத்திய அமைச்சர் பதவி என்பது வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் இன்று மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள எம்பிக்களுக்கு டெல்லியில் உள்ள இல்லத்தில் வைத்து பிரதமர் மோடி டீ பார்ட்டி (தேநீர் விருந்து) வழங்கினார். இந்த டீ பார்ட்டி என்பது இன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களுக்கானது என கூறப்படுகிறது.
அந்த வகையில் டீ பார்ட்டியில் பாஜகவின் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜேபி நட்டா, நிதின் கட்கரி, அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, சர்பானந்த் சோனோவால், சிவ்ராஜ்சிங் சவுகான், ஜோதிராதித்ய சிந்தியா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் கூட்டணி கட்சிகளை பொறுத்தமட்டில் கர்நாடகா முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த லாலன் சிங், பிரதாப் ராவ் ஜாதவ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களான ராம் மோகன் நாயுடு, பெம்மாசானி சந்திரசேகர், எல்ஜேபி கட்சியின் சிராக் பஸ்வான், ஆர்ஜேடியின் ஜெயந்த் சவுத்ரி, ஏஜேஎஸ்யூ கட்சியின் சந்திரசேகர் சவுத்ரி உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடிஅளித்த தேநீர் விருந்தில் தமிழக முன்னாள் பாஜக தலைவரும், மத்திய இணை அமைச்சராக செயல்பட்டவருமான எல் முருகன் பங்கேற்றார். இதன்மூலம் மீண்டும் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்க உள்ளாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இவர் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்பியாக உள்ளார். லோக்சபா தேர்தலில் நீலகிரியில் போட்டியிட்ட எல் முருகன், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரதமர் மோடியின் தேநீர் விருந்தில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த தேநீர் விருந்தில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து மீண்டும் மத்திய அமைச்சராக எல் முருகனுக்கு பதவி வழங்கப்படுகிறதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்கும் எம்பிக்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
-
ஒரே நேரத்தில் ஓமன் மற்றும் மலேசியாவுடன் பேசிய மோடி.. மாஸ்டர் மூவ்! இனி பிரச்சனை இருக்காது! -
கருப்பு தங்கம் ஜாக்பாட்! புதினின் சீக்ரெட் ஆஃபர்.. உங்க கிச்சன் வரை ஊடுருவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications