லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம்.. பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு! வன்முறை வெடித்தது
ஸ்ரீநகர்: யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட லடாக்குக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் லே-வில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்திற்கும், காவல் வாகனங்களுக்கும் தீ வைத்திருக்கிறார்கள்.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீர் தனி மாநிலமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை லடாக்குக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால், மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று லே பகுதியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி, காவல் வாகனங்களுக்கு தீ வைத்திருக்கிறார்கள். லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடித்திருக்கிறார்கள்.
போராட்டக்காரர்கள் லடாக்கை மாநிலமாக அங்கீகரிப்பது மட்டுமல்லாது அதற்கு அரசியலமைப்பு அட்டவணை 6ல் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 6வது அட்டவணை சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி உள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களில், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுயாட்சியை இந்த அட்டவணை வழங்குகிறது.
அதேபோல லடாக்குக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த அந்தஸ்து கிடைப்பதன் மூலம், லடாக்கின் தனித்துவமான பழங்குடியின கலாச்சாரம், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உள்ளூர் மக்களுக்கே அதிக அதிகாரம் இருக்கும் என்று நம்புகின்றனர். அதேநேரம் இந்த கோரிக்கை மூலம் நாங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்பவில்லை என்றும், இந்திய ஒன்றியத்துக்குள் அதிக சுயாட்சியையும், பாதுகாப்பையும் கேட்பதால்தான் இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம் என்றும் போராட்டக்காரர்கள் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
லடாக்கை பொறுத்தவரையில் பௌத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையான அளவில் இருக்கின்றனர். குறிப்பாக லே பகுதியில் பௌத்தர்களும், கார்கில் உள்ளிட்ட மாவட்டங்களில் இஸ்லாமியர்களும் அதிகமாக வசிக்கிறார்கள். இருவருக்கும் இடையில் பெரிய அளவுக்கு ஒற்றுமை இருக்காது. ஆனால் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கான போராட்டத்தில் இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி












Click it and Unblock the Notifications