Ladakh Moon research: நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு போக.. லடாக்கில் பயிற்சி பெறும் விண்வெளி வீரர்கள்! அசத்தும் இந்தியா
டெல்லி: எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் செல்ல இருக்கிறார்கள். இதற்காக பயிற்சி எடுக்க லடாக்கில் சிறப்பு ஆய்வு நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. உலகின் வேறு எந்த இடத்தை காட்டிலும் லடாக்கில் பயிற்சி மையம் அமைக்கப்படுவது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக உள்ளது.
மனிதர்கள் நிலவு மற்றும் செவ்வாய்க்குச் செல்லும் சாத்தியமான விண்வெளிப் பயணங்களுக்காக, பெங்களூருவைச் சேர்ந்த ப்ரோட்டோபிளானட் எனும நிறுவனம் "மனித வெளிக்கோள் ஆய்வு" திட்டத்தை லடாக்கின் ட்சோ கார் பகுதியில் தொடங்கியுள்ளது.

இது ஒரு சிறப்பு ஆய்வு நிலையமாகும். இங்கு ஆகஸ்ட் 1 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பணியில் ஈடுபடுவார்கள். ஆழமான விண்வெளிச் சூழலை உருவகப்படுத்தி, மனிதர்களின் உடல் மற்றும் மனநல தகவமைப்புத் திறன், நெகிழ்வுத்தன்மையை மதிப்பிடும் விரிவான ஆய்வுகள் இங்கு நடைபெறும்.
இந்த ஆய்வுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து, பூமியை விட்டு தொலை தூரத்திற்கு சென்று நீண்ட காலம் மனிதர்கள் தங்கி இருப்பதற்கு ஏற்ப நீடித்த இருப்புக்கான உறுதியான விதிமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்க உதவும் என ப்ரோட்டோபிளானட் தெரிவித்துள்ளது.
உயரமான மற்றும் குளிர்ந்த பாலைவனமான ட்சோ கார், நிலவு மற்றும் செவ்வாயின் புவியியல், சுற்றுச்சூழல் நிலைமைகளை ஒத்துள்ள ஒரு சிறந்த ஒப்புமைத் தளமாக ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இத்திட்டத்தில் ப்ரோட்டோபிளானட் உடன் இணைந்துள்ளது. "நிலைய கட்டுமானத்திற்கு இஸ்ரோ ஒரு பகுதி நிதி அளித்ததுடன், விண்ணப்பதாரர் தேர்வு அளவுகோல்களையும் பரிந்துரைத்தது," என்று ப்ரோட்டோபிளானட் இயக்குநர் சித்தார்த் பாண்டே தெரிவித்தார்.
முதல் கட்ட பரிசோதனைக்காக, விண்வெளிப் பொறியியல் மற்றும் கோள் அறிவியலில் பட்டங்கள் பெற்ற விஞ்ஞானிகளான ராகுல் மோகலபள்ளி மற்றும் யமன் அகோட் இங்கு உளவியல், உடலியல், மரபணுவியல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
லடாக்கில் அமைந்திருப்பதை போலவே, அமெரிக்காவில் செவ்வாய் பாலைவன ஆய்வு நிலையம், கனடாவில் ஃப்ளாஷ்லைன் செவ்வாய் ஆர்க்டிக் ஆய்வு நிலையம், ரஷ்யாவில் பயோஸ்-3 என பல சர்வதேச ஆய்வு மையங்கள் விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உருவகப்படுத்துகின்றன. சர்வதேச தரத்திற்கு நிகராக லடாக்கில் ஆய்வு நிலையைம் அமைக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications