Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லக்கின்பூர்கேரி வன்முறை.. மத்திய அமைச்சர் மகன், உ.பி. அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் உத்தரப்பிரதேச அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தது.

ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

லக்கிம்பூர்

லக்கிம்பூர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில், கடந்த ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தனர். அவர்கள் வந்தும் போராட்டம் நடந்து கொண்டிருந்ததால், அங்கிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றினர். இதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

வன்முறை

வன்முறை

இதையடுத்து லக்கிம்பூரில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தை சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தது. அதில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா குற்றவாளி என வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. அதன்பிறகு ஆஷிஷ் மிஸ்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமின்

ஜாமின்

அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி லக்கிம்பூர் விவகாரத்தில் மிக முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியது. உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த ஜாமின் வழங்கப்பட்டது, உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்யக்கோரி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

வழக்கு

வழக்கு

ஆஷிஷ் மிஸ்ரா ஜாமினில் வெளிவந்த சில நாட்களிலேயே, இந்த வழக்கில் முக்கிய சாட்சி தாக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. இனி, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தாக்கியவர்கள் மிரட்டியுள்ளதாக தாக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா, உத்தரப்பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும் என‌ உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இந்த வழக்கின் சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+