ட்ரோன் மூலம் எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகள்! லஷ்கர்-இ-தொய்பா தீவிர பயிற்சி! அலர்ட் மோடில் ராணுவம்
டெல்லி: ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் பயிற்சியை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரோன்கள் கண்டுபிடிப்பு வான்வெளி போக்குவரத்தில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்திவிட்டது. இது முன்னரே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில்தான் இதன் பயன்பாடு அதிகரித்தது. உணவு, மருந்து உள்ளிட்டவற்றை டெலிவரி செய்ய இந்த ட்ரோன்கள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டன. இது தவிர ஆய்வு, உளவு, தாக்குதல், நிலங்களை அளவீடு செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ட்ரோன்கள் மனிதர்களை சுமந்து செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் இது இன்னும் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்படி இருக்கையில் மனிதர்களை சுமந்து செல்லும் ட்ரோன்களை கொண்டு தீவிரவாதிகளை எல்லையில் ஊடுருவ வைக்க லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோவில் ட்ரோன் ஒரு மனிதரை சுமந்து வந்து குட்டை போன்ற நீர்நிலையில் போட்டுவிடுகிறது.
இந்த வீடியோ லஷ்கர் ட்ரோன் பயிற்சி முகாமுக்குள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வகை ட்ரோன்கள் அதிகபட்சமாக 70 கி.கி வரை எடையை சுமந்துக்கொண்டு 60 கி.மீ வரை பறக்கும் திறன் கொண்டதாகும். இது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போதும், "இது மிகவும் சக்தி வாய்ந்த ட்ரோன். இதை கொண்டு மணிதர்களை கூட வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். அதேபோல சில பயங்கரவாத அமைப்புகள் இந்த ட்ரோன்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிச்சயம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-ன் உதவியின்றி இதுபோன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களை பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்றிருக்காது" என்று கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்திய எல்லையில் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிகள், போதை பொருட்கள் வீசப்பட்டிருந்தன. இப்படி நடக்கும்போதெல்லாம் பாதுகாப்பு படையினர் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதற்கெல்லாம் உச்சமாக கடந்த மாதம் பயங்கரவாதியை ஏற்றிக்கொண்டு வந்த ட்ரோன் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் அந்த பயங்கரவாதியை தரையிறக்கியது.

நிலைமை இப்படி இருக்கும்போது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் ட்ரோன் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக வெளியான வீடியோ பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது. கடந்த 12ம் தேதி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் ஒரு போலீஸ் உயர் அதிகாரி என மூன்று பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான சலசலப்புகள் ஓய்வதற்குள் தற்போது லஷ்கர்-இ-தொய்பாவின் ட்ரோன் பயிற்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications