"பொது சிவில் சட்டம்!" ஜூலை 28 வரை கருத்துகளை கூறலாம்.. கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில காலமாகவே மீண்டும் பொது சிவில் சட்டம் தான் இங்கே பேச்சாக இருக்கிறது. அதாவது நாட்டில் இப்போது அனைத்து வித கிரிமினல் வழக்குகளுக்கும் ஒரே சட்டம் தான் இருக்கிறது.

இருப்பினும், ஒரே சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது. இதை மாற்றி நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்,
பாஜக இதைத் தேர்தலிலேயே வாக்குறுதியாகக் கூறியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிப் பல பாஜக தலைவர்கள் இது குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி,"இந்தியாவிற்கு இப்போது தேவை பொது சிவில் சட்டம் தான். ஒரு நாடு எப்படி இரண்டு வேறு வேறு சட்டங்களைக் கொண்டு இயங்க முடியும்" என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே இது குறித்து கருத்துக் கேட்பது தொடர்பாக மத்திய அரசு கடந்த மாதம் 14ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த பொது சிவில் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
நேற்று வரை பொது சிவில் சட்டம் குறித்து 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். இதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. இருப்பினும், பல்வேறு தரப்பினரும் இதன் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேலும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது வரும் ஜூலை 28ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications