செந்தில் பாலாஜி ஜெயிப்பது தோற்பது வேற கதை.. கபில் சிபல் சொன்ன வார்த்தை! டக்கென பாய்ந்த துஷார் மேத்தா
டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இடையே காரசார வாதம் நடைபெற்று வருகிறது. "நான் என்னுடைய க்ளையண்ட்டுக்காக நிற்கிறேன், அவர் தோல்வியடையலாம் அல்லது ஜெயிக்கலாம். அது வேறு கதை" எனக் கூறியுள்ளார் கபில் சிபல்
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.

இன்று பரபர விசாரணை: இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டு வருகிறார். நேற்றைய வாதத்தின் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறைக்கு காவலில் எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதற்கான வாதங்களை முன்வைத்து வருகிறார் கபில் சிபல்.
தீபக் மகாஜன் வழக்கை மேற்கோள் காட்டிய கபில் சிபல், "தீபக் மகாஜன் வழக்கில், ஒரு நபர் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் ஒரு 'நபர்' என்று குறிப்பிடப் படுகிறார், 'குற்றம் சாட்டப்பட்டவர்' என்று இல்லை. அவரை நீதிமன்றக் காவலுக்கு கூட அனுப்ப முடியவில்லை. இப்போது இங்கு பிரச்சனை, செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் அனுப்ப முடியுமா என்பதுதான்.
சொலிசிட்டர் ஜெனரலுக்கு ஏன் புரியவில்லை?: ஆனால், அமலாக்கத்துறை போலீஸ் காவல் கேட்கிறது. இது ஏன் சொலிசிட்டர் ஜெனரலுக்கு புரியவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அந்த வழக்கில் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம். அது வேறு. என்னைக் கூட நீதிமன்றக் காவலில் வைக்கலாம். பி.எம்.எல்.ஏ சட்டம் அப்படி இருக்கிறது.
எனது கற்றறிந்த நண்பர் (சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா) தீபக் மகாஜனைப் பற்றிப் பூசி மெழுகினார். மூன்றாவது நீதிபதி கூட தீபக் மகாஜனைப் பற்றி பேசவில்லை. நாங்கள் சொல்வது, சட்டப்படி நீதிமன்றக் காவலுக்கு மட்டுமே பொருந்தும். அமலாக்கத்துறையினர் நீதிமன்ற காவல் மட்டுமே கோர முடியும்.
குறுக்கிட்ட நீதிபதி: அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுந்தரேஷ், கைது செய்வதை தண்டனையாக கருத முடியாது. கைது செய்யப்படுவது விசாரணை நோக்கத்திற்காகத்தான். அதிகமான தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகமைகள் கைது செய்கின்றன என கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வாதாடிய கபில் சிபல், "என் கவலை என்ன என்றால், இந்தச் சட்டம் போதுமான அளவு பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
செந்தில் பாலாஜி தோற்கலாம் ஜெயிக்கலாம்: நான் என்னுடைய க்ளையண்ட்டுக்காக நிற்கிறேன், அவர் தோல்வியடையலாம் அல்லது வெல்லலாம். அது வேறு கதை.." என்றார் கபில் சிபல். அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அரசியல் ரீதியாக வாதங்களைச் செய்யாமல், உண்மைகள் மற்றும் சட்டங்களுக்குள் நாம் செல்வோம்" எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே காரசாரமான வாதங்கள் தொடர்ந்தன.
காரசார வாதம்: 2002ல் இருந்து இதுவரை 300 பேருக்கு மேல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படவில்லை. தவறுதலாக ஒருவரை கைது செய்துவிட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என துஷார் மேத்தா வாதம் வைக்க, இந்த நாட்டில் யாருக்கு தண்டனை விதிக்கப்பட்டது? ஒருபோதும் தவறான கைது நடைபெற்றதில்லையா என பதில் கொடுத்தார். இதையடுத்து, நீதிபதி போபண்ணா, வழக்கிற்கு வருவோம் எனக் கூறி அவர்களை சமாதானம் செய்தார்.
மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளாக கருதப்பட்டால், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும். அப்படி எல்லா அதிகாரங்களும் இருந்தால் அது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது. 15 நாட்களுக்கு மேல் சென்றால் அது நீதிமன்றக் காவலாக மட்டுமே இருக்க முடியும்.
போலீஸ் காவலாக இருக்க முடியாது. ஒருவர் நீதிமன்றக் காவலில் இருக்கும்போது விசாரிக்க எந்தத் தடையும் இல்லை. செந்தில் பாலாஜி தற்போது சிறையில் தான் இருக்கிறார். வேண்டுமென்றால் இப்போது கூட அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தலாம்." என வாதங்களை அடுக்கியுள்ளார் கபில் சிபல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications