உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்றது ஏன்? கைதான வழக்கறிஞர் வாக்குமூலம்
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசிய சம்பவம் இன்று நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பது தெரியவந்தது. ராகேஷ் கிஷோர் யார்? எதற்காக இந்த செயலை செய்தார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் இன்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நீதிபதி பேசிக்கொண்டிருந்த போது அங்கு அமர்ந்திருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென எழுந்து சென்று தான் காலில் அணிந்திருந்த ஷூவை எடுத்து நீதிபதி நோக்கி வீசினார்.

ஷூவை வீசிய வழக்கறிஞர்
ஆனால் ஷூ நல்வாய்ப்பாக நீதிபதி மீது படவில்லை. அதற்கு முன்பாகவே கீழே விழுந்தது. உடனடியாக நீதிமன்றத்தில் இருந்த பாதுகாவலர்கள் அவரை வெளியே இழுத்து சென்றனர். இந்த சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் எந்தவித பதற்றமும் அடையாத தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், 'நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். "இவை எல்லாம் என்னை பாதிக்காது. இது போன்ற சம்பவங்கள் என்னை பாதிக்காது" என்று கூறினார்.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கைது
இந்த நிலையில் நீதிபதி மீது காலணியை வீச முயன்றவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிபதி மீது காலணி வீச முயற்சித்ததாக டெல்லி போலீசாரால் ராகேஷ் கிஷோர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், "சனாதனத்துக்கு எதிராக கருத்து கூறியதால் தான் தாக்கினேன்" என்று கூறியுள்ளார்.
முந்தைய வழக்கு ஒன்றில், கஜுராஹோவில் உள்ள 7 அடி உயர விஷ்ணுவின் உடைந்த சிலையை மீட்டெடுப்பது தொடர்பாக நீதிபதி பி.ஆர். கூறிய கருத்தினை கண்டித்து தான் இப்படி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக தொடர்ந்து ராகேஷ் கிஷோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
யார் இந்த ராகேஷ் கிஷோர்?
ராகேஷ் கிஷோர் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் 71 வயது வழக்கறிஞர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும், கிளார்க்குகளுக்கும் வழங்கப்படும் பிராக்ஸிமிட்டி கார்டை (proximity card) வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தலைமை நீதிபதி மீது காலணியை வீசியதற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. கடந்த மாதம் 16ஆம் தேதி கஜுராஹோவில் உள்ள 7 அடி உயர விஷ்ணுவின் உடைந்த சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், "இப்போது சென்று தெய்வத்திடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே, இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கருத்து கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்தான் இன்று வழக்கறிஞர் கிஷோர் காலணியை வீசி தாக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications