Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முழு போருக்கான மிகப்பெரிய அறிகுறி! ராணுவ வீரர்களின் விடுப்புகள் நீக்கம்! பெரிய விஷயம் நடக்க போகுது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுக்க பாரா மிலிட்டரி ராணுவ வீரர்களின் விடுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன. புதிதாக விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே விடுப்பு எடுத்தவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரவர் போஸ்டுகளுக்கு உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுவாக ஒரு நாடு போருக்கு போகும் முன் சில விஷயங்களை கண்டிப்பாக மேற்கொள்ளும்.

1. போர் ஒத்திகை செய்வது. அதற்கான ஒத்திகை இன்று நடக்க உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய போர் ஒத்திகையாக இது பார்க்கப்படுகிறது. போர்ச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை ஒத்திகை நடத்த, பல மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. விமான தாக்குதல் அபாயச் சங்கு ஒலிக்க விடுவது, தாக்குதல் நடந்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை ஒத்திகை பார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leaves of all Para Military forces cancelled in India Are we heading towards war with Pakistan

விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் தாக்கத்தை மதிப்பிடுதல். அவை எப்படி இருக்கின்றன, சரியாக இயங்குகிறதா? விமானங்கள் வருவதை முறையாக அறிவிக்கிறதா என்பதை மதிப்பிடுவது. இந்திய விமானத்துடன் ஹாட்லைன்/ரேடியோ தொடர்பு இணைப்புகளை இயக்குதல். சோதனை செய்தல், படை கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டைச் சோதிப்பது.

எதிரிகளால் தாக்குதல் ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிவில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் போன்றோருக்கு பயிற்சி அளித்தல். விபத்து தடுப்பு நடவடிக்கைகளை வழங்குதல். முக்கியமான ஆலைகள்/நிறுவனங்களை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடுளை செய்தல். அவசர சேவைகள், தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு சேவைகளின் செயல்பாடுகள் மற்றும் வேகத்தை கண்டுபிடித்தல்.

விபத்து தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல். பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வேகமாக செல்ல வெளியேற்றத் திட்டங்களை வகுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

2. ராணுவ வீரர்களின் விடுப்புகள் நீக்கப்படுதல். அதன்படியே இன்று முதல் விடுப்பு நீக்கப்படுகிறது. இது போருக்கான முக்கிய அறிகுறி ஆகும்.

3. போருக்கு முன் ஆயுதங்கள், போர் கப்பல்கள், விமானங்களை வைத்து பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். அது கடந்த 2 வாரமாக மேற்கொள்ளப்படுகிறது.

4. போருக்கு முன்பாக எல்லை கடந்த தாக்குதல்கள் நடத்தப்படும். அதன்படியே பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்தியா சார்பாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.

இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை.

இதோடு தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்த பின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார். இப்படி நடக்கும் தொடர் நிகழ்வுகள் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே முழுமுதற் போர் ஏற்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+