குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சிறுத்தை... எல்லாம் பசிக்கொடுமை.. வேறென்னத்தச் சொல்ல..!
குழம்பிய குட்டையில் சிறுத்தை ஒன்று மீன் பிடிக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
டெல்லி: சிறுத்தை ஒன்று குட்டையில் மீன் பிடிக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video
காட்டுக்குள் வாழும் சிறுத்தைகள் பொதுவாக மான், எருமை, வரையாடு போன்றவைகளைத்தான் வேட்டையாடி உண்ணும். அதுபோன்ற உணவுகள் தான் அதற்கு பசியாற்றும். எனவே சிறுத்தைகள் வேறு சிறு பிராணிகளை வேட்டையாடி சாப்பிட்டதாக இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.
ஆனால் அந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், சிறுத்தை ஒன்று மீன் பிடித்து சாப்பிடும் வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது. வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது பதிவாகியுள்ளது.

மீன் பிடிக்கும் சிறுத்தை
காட்டுக்குள் இருக்கும் சிறு குட்டைக்கு மிக அருகில் வந்து நிற்கிறது அந்த சிறுத்தை. குழம்பிய அந்த குட்டையில் மீன்கள் துள்ளி குதித்துக்கொண்டிருக்கின்றன. சில விநாடிகள் நோட்டமிடும் சிறுத்தை, குட்டைக்குள் பாய்ந்து ஒரு மீனை லாவகமாக வாயில் கவ்விக்கொண்டு வெளியேறுகிறது.

மாற்று உணவு
"ஒரு சிறுத்தை மீன் பிடிக்கிறது. இந்த பூனை (சிறுத்தை) எதை வேண்டுமானாலும் உண்ணும் போல் தெரிகிறது. சூழலுக்கு தகுந்த மாதிரி தன்னை தானே மாற்றிக்கொண்டிருக்கிறது", வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பசி வந்தால்...
உண்மை தான். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதுபோல் தான் இந்த சிறுத்தை தனது பசியை போக்க ஏதாவது ஒன்று கிடைத்தால் போதும் என நினைத்து மீன் பிடித்து உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வைரலான வீடியோ
பர்வீன் கஸ்கான் பகிர்ந்துள்ள இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது. சிறுத்தை மீன் பிடிக்கும் அதிசயத்தை பார்த்து பலரும் புருவம் உயர்த்தி வருகின்றனர். அந்த சிறுத்தையின் மீன் பிடிக்கும் ஆற்றலை நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

இது புதிதல்ல
ஆனால் இது ஒன்றும் புதிதல்ல என்கின்றனர் சில நெட்டிசன்கள். புலி, சிறுத்தை, சிங்கம் உள்ளிட்ட மிருகங்கள் தங்களுக்கு ஏற்ற உணவு கிடைக்காத சமயத்தில், மீன் பிடித்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று தான் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications