ரயில்களில் யாருக்கெல்லாம் லோயர் பர்த் கிடைக்கும்? முதியவர்களுக்கு கிடைக்காவிட்டால் என்ன செய்யலாம்?
டெல்லி: ரயில்களில் யாருக்கெல்லாம் லோயர் பர்த் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்த அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
நீண்ட தூரமாக இருந்தாலும் குறைந்த தூரமாக இருந்தாலும் மக்கள் அதிகம் விரும்புவது பேருந்துகளை விட ரயில் பயணங்களே ஆகும். இந்த ரயில் பயணங்களில் அலுங்காமல் குலுங்காமல் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பயணிக்க முடியும். ஆனால் பேருந்துகள், கார்களில் பயணிக்கும் போது முதுகு வலி, இடுப்பு வலி உள்ளிட்டவைகளால் அவதியடைகிறோம்.

நீண்ட நேரம் கால்களை தொங்க போட்டு கொண்டு உட்கார்ந்திருந்தால் கால்கள் வீங்கிவிடும். மேலும் சாதாரண ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கினாலும் பேருந்தின் முன் பக்க சீட்டுகளில் இருப்போருக்கு ஒரு அதிர்வும் இருக்காது, ஆனால் பின சீட்டுகளில் இருப்போருக்கு தூக்கி போடும். இது போன்ற பிரச்சினை ரயில்களில் இருக்காது.
மேலும் பேருந்துகளை காட்டிலும் ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு. அதனாலும் இந்த ரயில் பயணங்களை மக்கள் விரும்புகிறார்கள். இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த ரயிலில் இருக்கையை முன் பதிவு செய்து கொள்கிறார்கள். பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் ரயில்களில் முன் பதிவு தொடங்கிய சில மணித்துளிகளிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும்.
ஆனாலும் எப்படியாவது ரயில்களில் பயணம் செய்து சொந்த ஊர்களில் ஆனந்தமாக பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். நீண்ட தூர பயணங்களின் போது தூங்கி கொள்ள பர்த்கள் இருக்கும். அதில் லோயர், மிடில், அப்பர் என்ற மூன்று இருக்கும். பொதுவாக பர்த்களை ரயில்வே நிர்வாகமே ஒதுக்கீடு செய்யும். ஒரு வேளை மாற்றுத்திறனாளி என நாம் குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு ஏற்றபடியான பர்த் ஒதுக்கீடு செய்யப்படும்.
அது போல் டிக்கெட் முன்பதிவின் போது நாம் குறிப்பிடும் வயதை கொண்டு பர்த்கள் ஒதுக்கப்படும். லோயர் பர்த்களைத்தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். இந்த லோயர் பர்த்தில் ஜன்னல் இருக்கும். மிடில் மற்றும் அப்பர் பர்த்களில் ஏறி இறங்க வசதியாக இருக்காது. அந்த வகையில் ரயில்களில் லோயர் பர்த்துகள் யாருக்கெல்லாம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு லோயர் பர்த் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 இருக்கைகள் உள்ளன. இரு லோயர் பெர்த், இரு மிடில் பெர்த். இந்த இருக்கைகளில் மாற்றுத்திறனாளியுடன் பயணம் செய்வோரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது போல் கரீப் ரத் ரயிலில் 2 லோயர் பர்த்களும் இரு அப்பர் பெர்த்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

அது போல் கர்ப்பிணிகளும் இந்த கீழ் பெர்த்தை பெற்றுக் கொள்கிறார்கள். வயதானவர்களுக்கு கேட்காமலேயே இந்த லோயர் பர்த் கிடைக்கும். ஒரு வேளை தப்பி தவறி வயோதிகர்களுக்கோ அல்லது கர்ப்பிணிகளுக்கோ அப்பர் பெர்த்தை ஒதுக்கிவிட்டால் அவர்களுக்கு லோயர் பர்த் ஒதுக்குவது டிடிஆரின் கடமையாகும். பயணி கேட்டால் அவர் மாற்று ஏற்பாடுகளை செய்துதான் ஆக வேண்டும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications