கெஜ்ரிவால் கைது ஆகிறாரா? மதுபான முறைகேடு வழக்கில்.. விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன்..ஒரே பரபரப்பு
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். டெல்லியை பொறுத்தவரை யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு துணை நிலை ஆளுநருக்கே கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. இதனால், அரவிந்த் கெஜ்ரிவால் எடுக்கும் முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது என கெஜ்ரிவாலுக்கும் ஆளுநருக்கும் இடையே முட்டல் மோதல்கள் நீடித்து வருகிறது.

இத்தகைய சூழலில், டெல்லியில் கடந்த ஆண்டு புதிய மதுபான கொள்கை வெளியிடப்பட்டது. கடந்த 2021-22 ஆம் ஆண்டு கெஜ்ரிவால் வெளியிடப்பட்ட இந்த கொள்கையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும் இதனால், சில தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக உரிமக்கட்டணத்தைத் தள்ளுபடி செய்தல், குறைத்தல் உள்ளிட்டவற்றில் ஊழல் நடைபெற்றதாகவும் இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகிறது. அதேவேளையில், சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
மதுபான கொள்கையை உருவாக்கிய போது அந்த துறையை தன் வசம் வைத்திருந்த மணிஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அவருக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்திய சிபிஐ, முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி சம்மன் அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான மணிஷ் சிசோடியாவை கைது செய்தது.
டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது டெல்லியில் மட்டும் இன்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது என்று ஆம் ஆத்மி உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தற்போது மணிஷ் சிசோடியா நீதிமன்றக் காவலில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது சிபிஐ-யின் பார்வை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பக்கம் திரும்பியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ விடுத்துள்ள இந்த சம்மன் அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ விடுத்துள்ள சம்மனை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தும் என தெரிகிறது.
இதற்கிடையே, கெஜ்ரிவாலை கைது செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி எம்.பி சஞ்செய் சிங் கூறுகையில், " சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பது அவரை கைது செய்வதற்கான சதி ஆகும். இதுபோன்ற சம்மன்களால் ஊழலுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டம் நின்றுவிடாது" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications