டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா கிடக்குது விடு.. குவார்ட்டரை கொஞ்சம் உள்ளே விடு.. திருந்தலையே.. மக்கள் திருந்தலையே!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மதுபான கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டதால் கடைகள் திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் குடிமகன்கள் காத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ஒயின் ஷாப்பை திறப்பிற்கு பட்டாசு வெடித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட குடிமகன்கள் - வீடியோ

    ஒரு மாதத்திற்கு பிறகு கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வழக்கமான கடை திறப்பு நேரத்திற்கு முன்னதாக பல மணி நேரமாக பெரும்பாலான குடிமகன்கள் காத்திருந்து மதுவை சுவைத்தனர்.

    இதன் மூலம் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி இத்தனை நாட்கள் இந்த கடைகளை மூடி வைத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    குடிமகன்கள்

    தென்னிந்தியாவில் ஒரு கடையில் டாஸ்மாக் கடை முன்பு ஒரு கி.மீ. தூரத்திற்கு நிற்கும் குடிமகன்கள். பேசுவதை பார்த்தால் ஆந்திரவோ அல்லது கர்நாடகவோ போல் இருக்கிறது. எந்த மாநிலம் என தெரியவில்லை.

    கடைகளில் கூட்டம்

    மதுபானக் கடைகளில் இதுவரை கண்டிராத கூட்டம். இதனால் சமூக விலகல் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. மேலும் கொரோனா பரவும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    குடிமகன்கள்

    பல கி.மீ தூரத்திற்கு வரிசையில் நின்று மது வாங்க காத்திருக்கும் குடிமகன்கள். மதுக் கடைகள் திறந்தவுடன் காலை 7 மணிக்கெல்லாம் குடிமகன்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

    மதுபானக் கடை

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மதுபான கடைகள் விற்கும் இடங்களில் ஜே ஜே வென நிற்கும் கூட்டம். இதனால் அலுவலகம் செல்வோர் , அத்தியாவசிய பணிகளுக்காக செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜாலி

    அப்பா எப்படியோ வாங்கியாச்சு. கையில் 4 மதுபாட்டில்களுடன் ஜாலியாக செல்லும் குடிமகன். முகத்தில் எத்தனை சந்தோஷம் இவருக்கு பாருங்கள்.

    டாஸ்மாக் மதுபான கடைகள்

    கொரோனா வைரஸ் குறித்த அச்சமே இல்லாமல் டாஸ்மாக் மதுபான கடைகள் முன் மக்கள் கூட்டமாக நிற்கிறார்கள். இந்த விஷயத்தை மிகவும் அற்புதமாக விளக்குகிறது இந்த புகைப்படம்.

    கொண்டாட்டம்

    மதுபான கடைகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டவுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தை பாருங்கள். அறிவிப்பு வந்ததுதான் மிச்சம் ஒரே சந்தோஷம்தான்.

    English summary
    Liquor Shops in India found a long queue after 40 days wait. Drunkards are very happy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X