கல்வியறிவு...முதலிடத்தில் கேரளா...பின்தங்கிய ஆந்திரா... 8வது இடத்தில் தமிழ்நாடு!!
டெல்லி: நாட்டிலேயே கேரளா தவிர மற்ற தென் மாநிலங்கள் அனைத்தும் கல்வியறிவில் பின்தங்கி இருக்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. வழக்கம்போல் இந்தப் பட்டியலில் கேரள மாநிலம் 6.2%த்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. ஆந்திரா 66.4%த்துடன் மிகவும் பின் தங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 82.9%த்துடன் 8வது இடத்தில் உள்ளது.
இந்தியாவிலேயே ஆந்திர மாநிலம் மிகவும் பின்தங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக வெளியாகி இருக்கிறது. பீகார் மாநிலம் 70.9%த்துடன் ஆந்திராவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. தேசிய சராசரியான 77.7%த்தைவிடதெலங்கானா மாநிலம் வெறும் 72.8%த்துடன் பின் தங்கியுள்ளது. அசாம் 85.9%, கர்நாடகா 77.2%, உத்தரகண்ட் மாநிலம் 87.6%, பஞ்சாப் 83.7%, தமிழ்நாடு 82.9%, மேற்குவங்கம் 80.5%, அரியானா 80.4% பெற்றுள்ளன.

டெல்லி 88.7%, இமாசலப்பிரதேசம் 86.6%, உத்தரப்பிரதேசம் 73%, ராஜஸ்தான் 69.7% கல்வியறிவு பெற்றுள்ளன. கேரளாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான கல்வியறிவு வித்தியாசம் 2.2%ஆக இருக்கிறது. இது தேசிய அளவில் 14.4%ஆக இருக்கிறது. ஆண்கள் கல்வியறிவு 84.7%ஆகவும், பெண்களின் கல்வியறிவு 70.3%ஆகவும் உள்ளது.
ஆந்திர மாநிலம் கல்வியறிவில் பின்தங்கி இருந்தபோதும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான வித்தியாசம் 13.9%ஆக இருக்கிறது. இதுவே, ராஜஸ்தானில் 23.2% ஆகவும், பீகாரில் 19.2% ஆகவும், உத்தரப்பிரதேசத்தில் 18.4% ஆகவும் உள்ளது.
நகர்ப்புறங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான கல்வியறிவில் கேரளாவில்தான் குறைந்த அளவாக 1.9% உள்ளது. தெலங்கானாவில் இது 23.4%ஆகவும், ஆந்திராவில் 19.2%ஆகவும் இருக்கிறது.
அதேபோல் நகர்ப்புறத்தில் இருக்கும் ஆண்களின் கல்வியறிவுக்கும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் கல்வியறிவுக்கும் இடையிலான வித்தியாசம் 27.2%ஆக இருக்கிறது. இது ஆந்திராவில் 38%ஆகவும், ராஜஸ்தானில் 38.5%ஆகவும் இருக்கிறது.
கேரளாவில் கிராமத்தில் இருக்கும் பெண்களின் கல்வியறிவு 80%த்துக்கும் அதிகமாக இருக்கிறது. 22 பெரிய மாநிலங்களில் 13 மாநிலங்களில் மட்டும் 70%த்துக்கும் குறைவான கல்வியறிவு உள்ளது. இவற்றில் நான்கில் 60%த்துக்கும் குறைவாக இருக்கிறது.
தேசிய புள்ளிவிவர அலுவலக (NSO) தகவலில் இருந்து வெளியாகியுள்ளது. இது 2017-2018ஆம் ஆண்டுக்கான, 7 வயது மற்றும் அதற்கு மேல் இருப்பவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்












Click it and Unblock the Notifications