அந்தரங்க உறுப்பில் ‛சானிடைசர்' ஊற்றி தீவைத்த காதலன்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் கொடூரம்
டெல்லி: ஹரியானாவில் திருமணம் செய்யாமல் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' உறவில் இருந்த காதலியின் அந்தரங்க உறுப்பில் ‛சானிடைசர்' ஊற்றி காதலனே தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
திரிபுராவை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் ஹரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள கல்லூரியில் ‛பயோடெக்னாலஜி' படிப்பை படித்து வருகிறார். இவருக்கு டெல்லியை சேர்ந்த 19 வயது சிவம் என்பவருக்கும் ‛டேட்டிங்' செயலி வழியாக பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தை தொடர்ந்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். அது காதலாக மாறியது. இருவரும் காதலிக்க தொடங்கினர். மேலும் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.
இதற்கிடையே தான் இருவரும் திருமணம் செய்யும் வரை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடிவு செய்தனர். குர்கிராம் 6வது செக்டாரில் வீடு எடுத்து திருமணம் செய்யாமல் இருவரும் கணவன் - மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 19 ம் தேதி முதல் திடீரென்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. திருமணம் செய்வது தொடர்பாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிவம், ‛மெட்டல்' தண்ணீர் பாட்டீலை எடுத்து காதலியை தாக்கினார்.
அதன்பிறகும் கூட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே காதலியின் அந்தரங்க உறுப்பில் சானிடைசரை ஊற்றி தீவைத்துள்ளார் சிவம். இதில் படுகாயமடைந்த அந்த காதலி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதலில் டெல்லி சப்தர்சுங் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி காதலி அளித்த புகாரின் பேரில் சிவமை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் திடுக்கிட வைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கூறுகையில், ‛‛பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தான் பேலீசில்புகார் செய்தார். சம்பவம் நடந்ததும் அந்த மாணவி தனது தாய்க்கு போன்போட்டு அழுகிறார். காப்பாற்றும்படி கூறியுள்ளார். இந்த மாணவி லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது அவரது தாய்க்கு தெரியாதாம்.
தற்போது கைதான சிவம் மீது 115 (2) (நோக்கத்துடன் காயப்படுத்துதல்), 118 (1) (ஆபத்தான ஆயுதம் கொண்டு தாக்குதல்), 127 (7) (சிறைவைத்தல்), 69 (திருமணம் என்ற பெயரில் உடலுறவு வைத்து கொள்ளுதல்), 351 (2)(மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை பொறுத்து தேவை என்றால் கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும்'' என்றனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications