லாக்டவுன் 4.0: விமான, மெட்ரோ சேவைக்கு தடை.. சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கும்.. பேருந்துக்கு அனுமதி!
லாக்டவுன் 4.0 மூலம் விமான சேவைகள் நாட்டில் மீண்டும் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் மீதான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: லாக்டவுன் 4.0 மூலம் விமான சேவைகள் நாட்டில் மீண்டும் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் மீதான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக கொரோனா லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை வெளியிட்டுள்ளது. மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இன்னொரு பக்கம் நாடு முழுக்க பல்வேறு விஷயங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொடர்பான விஷயங்களுக்கு பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.

விமான சேவை என்ன ?
இந்த நிலையில் லாக்டவுன் 4.0 மூலம் விமான சேவைகள் நாட்டில் மீண்டும் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. லாக்டவுன் 3.0விலேயே விமான சேவை தொடங்கப்படும். குறைவான எண்ணிக்கையில் விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மக்கள் எதிர்பார்ப்பு என்ன?
இதற்காக நாடு முழுக்க மக்கள் கடும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாக தொடங்கினார்கள். ஆனால் விமான போக்குவரத்து மீதான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து தடை தொடரும். நாடு முழுக்க வந்தே பாரத் திட்டத்தின் சிறப்பு விமானங்கள் மட்டும் இயங்கும். இதனால் விமான சேவை தொடங்க மக்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

ரயில் சேவை எப்படி
அதேபோல் நாடு முழுக்க ரயில் சேவைகளும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முன்பே ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுவிட்டது. ஜூன் 30 வரை ஏற்கனவே ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்போதும் போல சிறப்பு ரயில் மற்றும் பிறமாநில தொழிலாளர்களுக்கான ரயில்சேவை எப்போதும் போல தொடரும்.

மெட்ரோ எப்படி
மெட்ரோ ரயில் சேவை தொடங்காது. பேருந்து சேவை மட்டும் தற்போது தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ள முடியும். மாநில அரசுகள் விமான சேவையை தொடங்க எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது, மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து விமான சேவை திறக்கப்படவில்லை என்கிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications