லாக்டவுன் 4.0.. மே 31 வரை தொடரும் ஊரடங்கு.. எது செயல்படும்? எது செயல்படாது? - முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும் வரையறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Lockdown 4.0 : யாருக்கு என்ன தளர்வு... முழு தகவல்

    கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட லாக்டவுன் இன்றுடன் முடியும் நிலையில் தற்போது லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுக்க 4-வது கட்ட லாக்டவுன் புதிய வகையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான தாளர்வுகள் அறிவிக்கப்ட்டுள்ளது..

    தடை தொடரும் சேவைகள் என்ன?

    தடை தொடரும் சேவைகள் என்ன?

    • உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்திற்காக தடை நாடு முழுக்க தொடரும். சிறப்பு ரயில் தவிர மற்ற ரயில் இயங்காது.
    • இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை
    • கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்
    • 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு
    • கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வீட்டுக்கு வீடு ஆய்வு
    சில விஷயங்கள் குற்றம்

    சில விஷயங்கள் குற்றம்

    பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம்

    பொது இடங்களில் பணியாற்றும் இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம்

    மெட்ரோ ரயில்கள் எப்போதும் போல இயங்காது

    தாங்கும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் செயல்படாது

    ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை

    மால்கள், ஜிம்கள், பார்க், தியேட்டர்கள் எப்போதும் போல செயல்படாது

    பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்காது .

    விளையாட்டு நிகழ்ச்சிகள்

    விளையாட்டு நிகழ்ச்சிகள்

    • விளையாட்டு நிகழ்ச்சிகள், அது தொடர்பான கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. அதே சமயம் மக்கள் இல்லாமலா வீரர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டுக்கு அனுமதி
    • திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் சமூக இடைவெளி அவசியம் - 50 நபர்களுக்கு மேல் கூட தடை
    • மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி
    • பொது இடங்களில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை
    • மத நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது
    அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் மற்றும் சேவைகள்:

    அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் மற்றும் சேவைகள்:

    • மாநிலங்கள் ஒத்துழைத்தால் மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து மேற்கொள்ளலாம்
    • மாநிலங்கள் ஒத்துழைத்தால் மாநிலங்களுக்கு இடையே மற்ற கார், பைக்சாதாரண போக்குவரத்து தொடர்ந்து செயல்படும்
    • மாநிலங்களே சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் மண்டலங்கள் குறித்த முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
    • ஆனால் மத்திய அரசின் வழி காட்டுதலின்படி மாநிலங்களே மண்டலங்கள் குறித்த முடிவுகளை எடுக்க முடியும்.
    • மேலே தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட விஷயங்களை தவிர மற்ற விஷ்யங்களுக்கு அனுமதி
    • முடிவெட்டும் கடைகளுக்கு அனுமதி, பொருட்கள் விற்கும் ஷாப்பிங் காம்பிளக்சிற்கு அனுமதி
    கட்டுப்பாட்டு ப்குதிகள் என்ன

    கட்டுப்பாட்டு ப்குதிகள் என்ன

    • கட்டுப்பாட்டு பகுதிகளில் அடிப்படை சேவைகளுக்கு மாட்டுக்கே அனுமதி. அடிப்படை தேவை இல்லாதா விஷயங்களாக மக்கள் இங்கே வெளியே வர கூடாது.
    • கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக கட்டுப்பாடுக்குள் தொடரும் .
    • ஆரோக்ய சேது செயலியை அலுவலகம் செல்லும் நபர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்
    • சரக்கு வாகனங்கள் எப்போதும் போல மாநிலங்களுக்கு இடையே செல்ல அனுமதிக்கப்படும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+