லாக்டவுன் 3.0: ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் மட்டும் டாக்சிகள் ஓட அனுமதி.. புதிய கட்டுப்பாடு
ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது
டெல்லி: ஆரஞ்சு மண்டலத்தின் கீழ் வரும் பகுதிகளில் சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது ஒரு டாக்சியில் டிரைவர் தவிர்த்து ஒரே ஒரு பயணி மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
Recommended Video
நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மே 4ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை இந்த லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டையும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலங்களாகவும் பிரித்துள்ளது. அதன்படி இந்த மண்டலங்கள் சில புதிய கட்டுப்பாடுகளும் சில புதிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து ஒரு பகுதி:

சிவப்பு மண்டலம்
ஆரஞ்சு மண்டலங்களில், சிவப்பு மண்டங்களில் தற்போது கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் போல, டாக்சிகள், கேப்கள் ஒரு பயணியுடன் மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். மாவட்டங்களுக்கு இடையிலான தனியார் வாகனங்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். நான்கு சக்கர வாகனங்களில் டிரைவர் தவிர்த்து அதிகபட்சம் 2 பேர் வரை மட்டுமே பயணிக்கலாம். மேலும் டூவீலர்களில் பில்லியன் ரைடிங் அனுமதிக்கப்படும்.

தடைகள்
பசுமை மண்டலங்களில், அனைத்துப் பணிகளும் அனுமதிக்கப்படும். அதேசமயம், நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ள விதிக்கப்பட்டுள்ள தடைகளில் சில இங்கும் அமலில் நீடிக்கும். பஸ்களைப் பொறுத்தவரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படும். பஸ் டிப்போக்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.

மாநில அரசு
அனைத்து வகையான சரக்கு போக்குவரத்தும் அனுமதிக்கப்படும். அண்டை நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் வரும் சரக்கு பரிமாற்றப் போக்குவரத்தை எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது. இதுபோன்ற சரக்குப் போக்குவரத்துக்கு தனியாக பாஸ் தேவையில்லை. நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் சரக்குப் போக்குவரத்து தங்கு தடையின்றி செயல்பட அனைத்து மாநில அரசுகளும் வழி ஏற்படுத்த வேண்டும்.

யூனியன் பிரதேசங்கள்
தனிப்பட்ட முறையில் தடை செய்யப்படாத பிற செயல்பாடுகள் அல்லது பல்வேறு மண்டலங்களில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படும். இருப்பினும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்களது பகுதியில் நிலவும் சூழலைப் பொறுத்து தேவைப்பட்டால், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் அனுமதிக்கும் அல்லது அனுமதிக்காமல் இருக்கும் முடிவை சுயமாக எடுக்கலாம்.

குவாரன்டைன்
மே 3ம் தேதிவரை அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளை லாக்டவுன் நீட்டிப்பிலும் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். அதற்கென்று தனியாக அதிகாரிகளிடம் புதிதாக அனுமதி பெறத் தேவையில்லை. வெளிநாட்டவர்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைப்பது, குவாரன்டைன் செய்யப்பட்டவர்களை விடுவிப்பது, பிற மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு திரும்ப அனுப்பி வைப்பது, யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோரை ரயில் அல்லது சாலை மார்க்கமாக அவரவர் மாநிலங்களுக்கு திரும்பி அனுப்பி வைப்பதை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

கடமை
மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் லாக்டவுன் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அதில் நீக்குப் போக்கு இருக்காமல் பார்த்துக் கொள்வது 2005, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அரசுகளின் கடமையாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications