அதே தேர்தல்.. அதே வாக்குப்பதிவு.. 2014 போலவே நடந்த 2019 முதற்கட்ட தேர்தல்.. வாவ் புள்ளி விவரம்!

சென்ற லோக்சபா தேர்தலில் பதிவான அதே வாக்குப்பதிவு சதவிகிதம்தான் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் இந்த வருடமும் பதிவாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்ற லோக்சபா தேர்தலில் பதிவான அதே வாக்குப்பதிவு சதவிகிதம்தான் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் இந்த வருடமும் பதிவாகி உள்ளது.

ஐந்து வருட பாஜக ஆட்சி முடிவிற்கு வந்ததை அடுத்து, தற்போது லோக்சபா தேர்தல் தொடங்கி உள்ளது. 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

நேற்று மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் இந்த வாக்குப்பதிவு சதவிகிதம் குறித்த முழு விபரம் வெளியாகி உள்ளது.

Lok Sabha Election 2019: Phase 1 of 2019 Lok Sabha polls, turnout trend exactly as in 2014

அதன்படி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 2014ல் 70.6% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 70.7% வாக்குகள் பதிவாகி உள்ளது.

சிக்கிமில் 2014ல் 80.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 69% வாக்குகள் பதிவாகி உள்ளது.

அசாமில் 2014ல் 78.6% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 68% வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஒடிசாவில் 2014ல் 74.6% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 68% வாக்குகள் பதிவாகி உள்ளது.

மேகாலயாவில் 2014ல் 68.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 67.2% வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2014ல் 78.3% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 66% வாக்குகள் பதிவாகி உள்ளது.

அருணாசலப்பிரதேசத்தில் 2014ல் 76.6% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 66% வாக்குகள் பதிவாகி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் 2014ல் 65.6% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 63.7% வாக்குகள் பதிவாகி உள்ளது.

தெலுங்கானாவில் 2014ல் 68.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 60% வாக்குகள் பதிவாகி உள்ளது.

உத்தரகாண்டில் 2014ல் 61.4% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 57.9% வாக்குகள் பதிவாகி உள்ளது.

மிசோராமில் 2014ல் 60.9% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 60% வாக்குகள் பதிவாகி உள்ளது.

மஹாராஷ்டிராவில் 2014ல் 63.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 56% வாக்குகள் பதிவாகி உள்ளது.

சத்தீஸ்கரில் 2014ல் 59.3% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 56% வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 2014ல் 54.5% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 56% வாக்குகள் பதிவாகி உள்ளது.

பீகாரில் 2014ல் 51.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 50% வாக்குகள் பதிவாகி உள்ளது.

திரிபுராவில் 2014ல் 81.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 85.4% வாக்குகள் பதிவாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் 2014ல் 82.7% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 81% வாக்குகள் பதிவாகி உள்ளது.

மணிப்பூரில் 2014ல் 84.7% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 78.2% வாக்குகள் பதிவாகி உள்ளது.

நாகாலாந்தில் 2014ல் 87.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ல் 78% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இந்த புள்ளி விபரங்களின்படி பார்த்தால் சென்ற லோக்சபா தேர்தலில் பதிவான அதே வாக்குப்பதிவு சதவிகிதம்தான் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் இந்த வருடமும் பதிவாகி உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் புள்ளி விவரங்கள் 2014ல் முதற்கட்ட வாக்குபதிவின் போது பதிவான வாக்குகள் ஆகும்.

நேற்று காஷ்மீரில் பல லட்சம் மக்கள் வாக்களிக்க வரவில்லை, அதேபோல் ஆந்திர பிரதேசத்தில் வாக்கு எந்திரங்கள் வேலை செய்யவில்லை, பல மாநிலங்களில் நக்சல் தாக்குதல் இருந்தது. இத்தனைக்கும் இடையில் வாக்கு பதிவு சென்ற முறை போல நடந்து இருப்பது தேர்தல் ஆணையத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+