நாளை 3-வது கட்ட லோக்சபா தேர்தல்: 94 தொகுதிகள் எவை? களம் காணும் மத்திய அமைச்சர்கள், மாஜி முதல்வர்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலில் 3-வது கட்ட வாக்குப் பதிவு நாளை 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் 94 தொகுதிகளில் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் மொத்தம் 1352 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகலாத் ஜோஷி, ஜோதிராதித்ய சிந்தியா, மாஜி முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, சிவ்ராஜ் சிங் சவுகான், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் நாளை களம் காணும் விஐபி வேட்பாளர்கள்.

3-ம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் 94 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

Lok Sabha Election 2024 3rd Phase 94 seats of 12 States to go to polls on tomorrow


நாளை 3-வது கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களும் தொகுதிகளின் எண்ணிக்கையும்:

அஸ்ஸாம் - 4

பீகார் 5

சத்தீஸ்கர் 7

தத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள் 2

கோவா 2

குஜராத் 25

கர்நாடகா 14

மத்திய பிரதேசம் 9

மகாராஷ்டிரா 11

உத்தரப் பிரதேசம் 10

மேற்கு வங்கம் 4


3-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் விவரங்கள்:

அஸ்ஸாம்: துப்ரி, கோக்ரஜார், பார்பெட்டா, குவஹாத்தி

பீகார்: ஜாஞ்சர்பூர், சுபால், அராரியா, மாதேபுரா, காக்ரியா

கோவா: வடக்கு கோவா, தெற்கு கோவா

குஜராத்: கட்ச், பனஸ்கட்டா, படன், மகேசனா, சபர்கந்தா, காந்திநகர், அகமதாபாத் கிழக்கு, அகமதாபாத் மேற்கு, சுரேந்திரநகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜாம்நகர், ஜூனாகத், அம்ரேலி, பாவ்நகர், ஆனந்த், கெடா, பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, சோட்டா உதய்பூர், பருச், பர்தோலி , சூரத், நவ்சாரி, வல்சாத்

கர்நாடகா: சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர், பிதார், கொப்பல், பெல்லாரி, ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவாங்கேரே, ஷிமோகா

மத்தியப் பிரதேசம்: பிந்த், போபால், குணா, குவாலியர், மொரேனா, ராஜ்கர், சாகர், விதிஷா, (பேதுல்)

மகாராஷ்ரா: பாராமதி, ராய்காட், உஸ்மானாபாத், லத்தூர், சோலாப்பூர், மாதா, சாங்லி, சதாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கானங்கல்

உத்தரப்பிரதேசம்: சம்பல், ஹத்ராஸ், ஆக்ரா, பதேபூர் சிக்ரி, பிரோசாபாத், மைன்புரி, எட்டா, புடான், ஆன்லா, பரேலி

மேற்கு வங்காளம்: மல்தஹா உத்தர், மல்தஹா தக்சின், ஜாங்கிபூர், முர்ஷிதாபாத்

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி/ டாமன் மற்றும் டையூ: தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ

(ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் நாளை நடைபெற இருந்த வாக்குப் பதிவு மே 25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது)

3-ம் கட்ட தேர்தலில் களம் காணும் விஐபி வேட்பாளர்கள்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (காந்தி நகர், குஜராத்)

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக, குணா, மத்தியப் பிரதேசம்)

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி (பாஜக, தார்வாட், கர்நாடகா)

டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி கட்சி, மைன்புரி, உத்தரபிரதேசம்)

ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, (காங்கிரஸ், பெர்ஹாம்பூர், மேற்கு வங்கம்)

பத்ருதீன் அஜ்மல், (ஏஐயுடிஎப், துப்ரி, அஸ்ஸாம்)

முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் (பாஜக, விதிஷா, மத்திய பிரதேசம்)

முன்னாள் முதல்வர் திக்விஜய சிங் (காங்கிரஸ், ராஜ்கர், மத்திய பிரதேசம்)

சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ், பாராமதி, மகாராஷ்டிரா)

முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை (பாஜக, ஹாவேரி, கர்நாடகா)

பி.ஒய்.ராகவேந்திரா (முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன், ஷிமோகா, பாஜக, கர்நாடகா)

கீதா சிவராஜ்குமார் (கன்னட நடிகர் சிவராஜ்குமார் மனைவி, ஷிமோகா, காங்கிரஸ், கர்நாடகா)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+