லோக்சபா தேர்தல் 2024: 7 ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. 62.36 சதவீத வாக்குகள் பதிவு
டெல்லி: லோக்சபா தேர்தல் 2024 கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் எட்டு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதன் மூலம் லோக்சபா தேர்தல் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. வரும் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 62.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று இருக்கும், இன்று கடைசி மற்றும் 7ஆம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

எட்டு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
மக்களவை தேர்தல்: பாஜகவை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார், 400 தொகுதிகளுக்கு மேல் வென்று பாஜக நிச்சயம் ஹார்ட்ரிக் வெற்றி பெறும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர்
7ஆம் கட்ட தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து நேற்று முன் தினம் பிரசாரம் ஓய்ந்த நிலையில், லோக்சபா தேர்தல் 2024 கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் எட்டு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 57 தொகுதிகளில் 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
8 மாநிலங்கள்: இன்று பீகார் மாநிலத்தில் எட்டு தொகுதிகளில் 134 வேட்பாளர்களும், சண்டிகரில் ஒரு தொகுதியில் 19 வேட்பாளர்களும், இமாச்சலப் பிரதேசத்தில் நான்கு தொகுதிகளில் 37 வேட்பாளர்களும், ஜார்க்கண்டில் மூன்று தொகுதிகளில் 52 வேட்பாளர்களும் ஒடிசாவில் ஆறு தொகுதிகளில் 66 வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளில் 328 வேட்பாளர்களும், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளில் 144 வேட்பாளர்களும் மேற்கு வங்கத்தில் ஒன்பது தொகுதிகளில் 124 வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர்.
பிரதமர் மோடி: இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் களமிறங்கி இருக்கிறார். ஏற்கனவே இரண்டு தேர்தல்களில் போட்டியிட்ட அவர் தற்போது மூன்றாவது முறையாக அங்கு போட்டியிடுகிறார். கடந்த 14ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது அங்கு இரண்டு முறை வாகன பேரணி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்து வருகிறார். நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் பகுஐன் சமாஜ் கட்சி, சுயேட்சை உள்ளிட்ட ஆறு வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
வாக்குப்பதிவு தொடக்கம்: இந்நிலையில் இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் காலையிலேயே பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மேலும் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் காவல்துறை, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடக்கும் தொகுதிகள்:
பீகார்: நாளந்தா, பாட்னா சாஹிப், பாடலிபுத்ரா, அர்ரா, பக்சர், சசாரம், கரகட், ஜஹானாபாத்
ஹிமாச்சல பிரதேசம்: காங்க்ரா, மண்டி, ஹமிர்பூர், சிம்லா
ஜார்கண்ட்: ராஜ்மஹால், தும்கா, கோடா
ஒடிசா: மயூர்பஞ்ச், பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர், கேந்திரபாரா, ஜகத்சிங்பூர்
பஞ்சாப்: குர்தாஸ்பூர், அமிர்தசரஸ், கதூர் சாஹிப், ஜலந்தர், ஹோஷியார்பூர், ஆனந்த்பூர் சாஹிப், லூதியானா, ஃபதேகர் சாஹிப், ஃபரித்கோட், ஃபிரோஸ்பூர், பதிண்டா, சங்ரூர், பாட்டியாலா
உத்தரபிரதேசம்: மஹராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷி நகர், தியோரியா, பான்ஸ்கான், கோசி, சேலம்பூர், பல்லியா, காஜிபூர், சண்டௌலி, வாரணாசி, மிர்சாபூர், ராபர்ட்ஸ்கஞ்ச்
மேற்கு வங்காளம்: டம் டம், பராசத், பாசிர்ஹாட், ஜெய்நகர், மதுராபூர், டயமண்ட் ஹார்பர், ஜாதவ்பூர், கொல்கத்தா தக்ஷின், கொல்கத்தா உத்தரா
சண்டிகர்: சண்டிகர்
இந்நிலையில் 7ஆம் கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீத விவரங்களை பார்க்கலாம்..
ஹிமாச்சல பிரதேசம் 48.63%
உத்தரப் பிரதேசம்- 39.31%
மேற்கு வங்கம்-45.07%
ஜார்கண்ட்- 46.80%
சத்தீஸ்கர் 40.14%
பீகார்- 35.65%
பஞ்சாப் 37,80%,
ஒடிசா 37.64%
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications