Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: பாஜகவின் ”டெல்லி கோட்டை”யை மிரட்டப் போகிறதா ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி டெல்லி யூனியன் பிரதேசத்தில் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2019 லோக்சபா தேர்தலில் டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகளையும் அள்ளிய பாஜகவுக்கு ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி சவாலாக இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் 7 தொகுதிகளையும் மொத்தமாக பாஜகவே வாரி சுருட்டியது. 2019 தேர்தலில் பாஜக, 56.86% வாக்குகளையும் பெற்று அசத்தல் வெற்றியை அறுவடை செய்தது. பாஜகவை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியால் 22.51% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

Lok Sabha Election 2024: AAP- Congress alliance to become threat to BJPs Delhi Fort?

2014-2019 லோக்சபா தேர்தல் ஒப்பீடு: 2019-ல் பாஜகவானது முந்தைய 2014 தேர்தலை ஒப்பிடுகையில் 10.46% வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றது. காங்கிரஸ் கட்சியும் 7.41% வாக்குகளை கூடுதலாகப் பெற்றிருந்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியானது டெல்லியில் ஆட்சியில் இருந்த போதும் வெறும் 18.11% வாக்குகளைத்தான் பெற்றது. 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் 14.79% வாக்குகளை இழந்திருந்தது ஆம் ஆம் ஆத்மி கட்சி.

2020 சட்டசபை தேர்தல்: ஆனால் 2020 டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் கள நிலவரமே முற்றிலும் தலைகீழாக மாறிப் போனது. டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வென்றது. அத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்குகள் 53.57%. பாஜகவோ 3 தொகுதிகளில் மட்டும் வென்றது. பாஜகவுக்கு 38.51% வாக்குகள் கிடைத்தன. லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு சவால் விட் அகாங்கிரஸ் கட்சி 4.26% வாக்குகளைத்தான் பெற்றது.

டெல்லி வாக்காளர்கள் மனநிலை: பொதுவாக டெல்லியைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தல் என்றால் பாஜகவுக்கு முழுமையாக வாக்களிப்பது- காங்கிரஸுக்கு கணிசமாக வாக்களிப்பது- ஆம் ஆத்மியை புறக்கணிப்பது என்கிற மனநிலை இருந்து வருகிறது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தல் எனில் முற்று முழுதாக ஆம் ஆத்மிக்கே அத்தனை வாக்குகளையும் போடுவது; பாஜகவுக்கு கணிசமான வாக்குகளை தருவது- காங்கிரஸை புதைகுழிக்கு அனுப்புவது என்கிற போக்குதான் இருந்து வருகிறது.

ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி: இந்த பின்னணியில் தற்போது லோக்சபா தேர்தலை ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் இணைந்து எதிர்கொள்கின்றன. லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி கட்சியானது தெற்கு டெல்லி, புது டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் வடமேற்கு டெல்லி தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி கிழக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, சாந்தினி சவுக் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சாந்தினி சவுக்: காங்கிரஸ் போட்டியிடும் சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில் 2019 தேர்தலில் பாஜக 52.94% வாக்குகளையும் காங்கிரஸ் 29.67%, ஆம் ஆத்மி கட்சி 14.74% வாக்குகளையும் பெற்றிருந்தன. இம்முறை ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இணைந்து நிற்கின்றன. இதனால் காங்கிரஸ் கட்சியானது பாஜகவுக்கு கடும் போட்டியைத் தரக் கூடிய தொகுதியாக சாந்தினி சவுக் இருக்கக் கூடும்.

கிழக்கு டெல்லி: அதேபோல கிழக்கு டெல்லி தொகுதியில் 2019- தேர்தலில் பாஜக 55.35%; காங்கிரஸ் 24.24%; ஆம் ஆத்மி 17.44% வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது ஆம் ஆத்மி + காங்கிரஸ் கை கோர்ப்பதால் இங்கும் பாஜகவுக்கு கடும் போட்டி உருவாகும் நிலைமை உள்ளது.

வடகிழக்கு டெல்லி: வடகிழக்கு டெல்லியில் 2019 தேர்தலில் பாஜக 53.90% வாக்குகளையும் காங்கிரஸ் 28.85%; ஆம் ஆத்மி13.06% வாக்குகளையும் பெற்றன. சாந்தினி சவுக், கிழக்கு டெல்லி போல வடகிழக்கு டெல்லியிலும் பாஜகவுக்கு காங்கிரஸால் கடும் போட்டியை உருவாக்க முடியும் என்கிறது களநிலவரம்.

தெற்கு டெல்லி: சரி ஆம் ஆத்மி போட்டியிடும் 4 தொகுதிகள் நிலைமை பார்ப்போம். ஆம் ஆத்மி களமிறங்கும் தெற்கு டெல்லி தொகுதியில் 2019 தேர்தலில் பாஜக 56.58% வாக்குகளைப் பெற்றது. இங்கு ஆம் ஆத்மி 26.35% வாக்குகளையும் காங்கிரஸ் 13.56% வாக்குகளையும் பெற்றது. தெற்கு டெல்லியில் பாஜக, ஆம் ஆத்மி வேட்பாளருடன் சற்று போராட்டத்தை எதிர்கொள்ளக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

மேற்கு டெல்லி: ஆம் ஆத்மி போட்டியிடும் மேற்கு டெல்லியில் 2019-ல் பாஜக 60.05% வாக்குகளையும் காங்கிரஸ் 19.92%; ஆம் ஆத்மி 17.47% வாக்குகளையும்தான் பெற்றிருந்தன. இத்தொகுதியில் என்னதான் காங்கிரஸ், ஆம் ஆத்மி கை கோர்த்தாலும் பாஜக எளிதாக வெல்லும் நிலைமைதான் இருக்கிறது.

வடமேற்கு டெல்லி: ஆம் ஆத்மி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வடமேற்கு டெல்லியிலும் 2019-ல் பாஜக 60.48% வாக்குகளைப் பெற்றது. ஆம் ஆத்மி 21.01%; காங்கிரஸ் 16.88% வாக்குகளையும் பெற்றது. இங்கும் கூட பாஜக எளிதான வெற்றியைத்தான் அறுவடை செய்யக் கூடும்.

புதுடெல்லி: புதுடெல்லி தொகுதியில் 2019 தேர்தலில் பாஜக 54.77%; காங்கிரஸ் 26.91%; ஆம் ஆத்மி 16.33% வாக்குகளைப் பெற்றது. இங்கு ஆம் ஆத்மியால் சற்று கூடுதலாக போட்டியை பாஜகவுக்கு உருவாக்க முடியும்.

சவாலை எதிர்கொள்ளும் பாஜக: தற்போதைய கள நிலவரங்களின் அடிப்படையில் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் தனித்து களம் கண்ட காலத்தில் மொத்தம் 7 தொகுதிகளையும் அள்ளிய பாஜக இம்முறை அந்த 'அபார வெற்றியை' பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்றே கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+