7,500 கலசங்கள்.. உள்ளே நிரம்பி வழியும் மண்.. டெல்லிக்கு கொண்டுவரும் மத்திய அரசு! காரணம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையில் எனது மனம் எனது நாடு இயக்கத்தின் கீழ் 7,500 கலசங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மண்ணுடன் 7,500 கலசங்கள் டெல்லி வந்தடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக மத்திய அர்சு தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி, 'மனதின் குரல் ' என்ற பிரபலமான நிகழ்ச்சியின் போது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டின் அழகான கலாச்சார கட்டமைப்பிற்கும், பன்முகத்தன்மை எவ்வாறு ஒருங்கிணைக்கும் சக்தியாக செயல்படுகிறது என்பதற்கும் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அமிர்தப் பெருவிழா மற்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியின் தொடர்ச்சியான எதிரொலிகளுக்கு மத்தியில், நாட்டில் மற்றொரு பெரிய பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது என்று பிரதமர் தனது சமீபத்திய மனதின் குரல் உரையில் கூறினார். வீரமரணம் அடைந்த நமது வீரர்களை கவுரவிக்கும் வகையில் 'எனது மனம் எனது நாடு' இயக்கம் தொடங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

Lok sabha election 2024: Amrit Kalash Yatra carrying soil in 7500 urns to Delhi

இதன் கீழ், நமது அழியாத தியாகிகளின் நினைவாக நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த மேதைகளின் நினைவாக, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கல்வெட்டுகள் நிறுவப்படும். இந்தப் பிரச்சாரத்தின் கீழ், நாடு முழுவதும் 'அமிர்த கலச யாத்திரை' ஏற்பாடு செய்யப்படும்.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் 7500 கலசங்களில் மண்ணைச் சுமந்து செல்லும் இந்த 'அமிர்த கலச யாத்திரை' நாட்டின் தலைநகரான தில்லியை அடையும் என்று அவர் மேலும் கூறினார். இந்தப் பயணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மரக்கன்றுகள் கொண்டு வரப்படும். தேசிய போர் நினைவுச்சின்னம் அருகே 7500 தொட்டிகளில் வரும் மண் மற்றும் மரக்கன்றுகளை இணைத்து 'அமிர்த வாடிகா' கட்டப்படும். இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் மகத்தான அடையாளமாகவும் மாறும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+